"பாலியல் சுகம்".. மொத்தம் 666 நாட்கள்.. 6 காரணம்.. மூச்சிரைக்க ஓடிய இளைஞர்.. அப்படியே ஆடிப்போன கோர்ட்
10 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு கேட்டு இளைஞர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்
போபால்: ஒரு விசித்திர வழக்கு மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.. இது தொடர்பாக நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்க போகிறதோ தெரியவில்லை, ஆனால், இந்த விநோத வழக்கே பரபரப்பாக அங்கு பேசப்பட்டு வருகிறது.
மத்திய பிரதேசம் ரத்லமில் உள்ள பழங்குடி இனத்தை சேர்ந்தவர் கந்து என்கிற காந்தீலால்.. இவருக்கு 35 வயதாகிறது.. இவர் தன்னுடைய நண்பருடன் சேர்ந்து, ஒரு இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்.
இதனால், பாதிக்கப்பட்ட பெண், போலீசில் புகார் அளித்தார்... கடந்த 2018 ஜனவரி 18-ம் தேதி அந்த பெண், போலீசில் புகாரை தந்திருந்தார்..

முள்காட்டுக்குள்
அதில், "என்னுடைய அக்கா வீட்டில் கொண்டு போய் விட்டுவிடுகிறேன் என்று சொல்லி, பைக்கில் லிப்ட் கொடுப்பது போல் கந்து என்பவர், என்னை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றார்.. அங்கு என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்... பிறகு, அவருடைய நண்பர் பர்னு அம்லியரை போனை போட்டு வரவழைத்தார்.. அவர் காட்டுக்கு வந்ததும், என்னை அவரிடம் கந்து ஒப்படைத்தார்.. எனக்கு வேலை வாங்கி தருவதாக சொல்லி, பர்னு என்னை இந்தூர் அழைத்து சென்றார்... அங்கு வைத்து பர்னுவும் என்னை 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்தார்" என்று அந்த பெண் புகார் தந்திருந்தார்.

666 நாட்கள்
இந்த புகாரின் அடிப்படையில், 2018 ஜூலை 20-ம் தேதி போலீசார் கேஸ் பதிவு செய்தனர்.. ஆனால், அதற்குள் கந்துவும், அவரது நண்பர் பர்னுவும் தலைமறைமாகிவிட்டனர்.. எனினும் போலீசார் அவர்களை தேடி கண்டுபிடித்து, 2020 டிசம்பர் மாதம் இருவரையுமே கைது செய்து, ஜெயிலில் அடைத்தனர்.. இது தொடர்பான வழக்கும் ரத்லம் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்தது... இந்த வழக்கு கடந்த வருடம் அக்டோபர் 10-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, கந்து மற்றும் பர்னு மீதான குற்றங்களை அரசு தரப்பால் நிரூபிக்க முடியாமல் போயிற்று.. இதனால், 666 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு, கந்துவும், பர்னுவும் விடுவிக்கப்பட்டனர்.

லிஸ்ட்
இந்த நிலையில், கந்து ஒரு வழக்கை தொடர்ந்தார்.. தன் மீது போலியாக கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், அதை வைத்து, 666 நாட்கள் அதாவது 2 வருடங்கள் ஜெயில் தண்டனை அனுபவித்ததாகவும், இதனால் தனக்கு மத்தியபிரதேச அரசு 10 ஆயிரத்து 6 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கோரி, மனுவை கந்து கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார்.. அதுமட்டுமல்ல ஜெயிலில் என்னவெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதையும் லிஸ்ட் போட்டு சொல்லி உள்ளார் கந்து.

வெயில் வெயில்
ஜெயிலில் நான் சந்தித்த கஷ்டங்களை விவரிக்க முடியாது... என் குடும்பத்தினரால், எனக்கு உள்ளாடைகூட வாங்கி தர முடியவில்லை.. அந்த அளவுக்கு பொருளாதார சூழ்நிலை வாட்டியது.. ஜெயிலுக்குள் நிறைய வெயில் அடித்தது.. குளிர் அடித்தது.. அதற்கேற்ற உடைகள் இல்லாமல் கஷ்டமான வானிலையை அனுபவித்தேன்.. சிறையில் இருந்து வெளியே வந்தபிறகும்கூட, தோல் தொடர்பான நோய்கள் வந்துவிட்டது.. நிரந்தர தலைவலியும் வந்துவிட்டது.. இன்னும் பல நோய்களை சந்தித்தேன்.. 6 பேர் கொண்ட குடும்பத்தில் சம்பாதிப்பவன் நான் மட்டும்தான்.. என் மனநிலைமையை கொஞ்சம் யோசித்து பாருங்கள்..

நாசமா போச்சு
நல்லவேளை, கடவுளின் ஆசிர்வாதத்தால் நான் ஜெயிலில் இருந்து வெளியே வந்துவிட்டேன்.. இருந்தாலும், போலி மற்றும் இட்டுக்கட்டிய குற்றச்சாட்டுகள் என் மீது திணிக்கப்பட்டன.. இதனால் என் வாழ்க்கையே நாசமாயிடுச்சு.. தொழில் செய்ய முடியவில்லை.. வேலையை இழந்துவிட்டேன். என் பெயருக்கு களங்கம் வந்துவிட்டது.. உடல் மற்றும் மனம் சார்ந்த வலிகள் நிறைய கூடிவிட்டன.. குடும்ப வாழ்க்கையை இழந்துவிட்டேன்.. கல்வி வாய்ப்பை இழந்துவிட்டேன். வாழ்க்கையில் முன்னேற்றத்தை இழந்துவிட்டேன்.. இந்த 6 காரணங்களுக்காக, எனக்கு தலா 1 கோடி ரூபாய் என மொத்தம் 6 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

பாலியல் இன்பம்
போலி வழக்கால் 666 நாட்கள் சிறை சென்றதால் "மனிதனுக்கு கடவுள் கொடுத்த பரிசான பாலியல் இன்பத்தை அனுபவிக்க முடியாமல் இழந்ததற்காக" மத்திய பிரதேச அரசு எனக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.. 2 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டதால், பாலியல் இன்பத்தை அனுபவிக்க முடியாமல் போய்விட்டது, பத்தாயிரம் கோடி ரூபாய் இழப்பீடு வேண்டும் என்று கந்து கேட்கிறாரே, அப்படியானால் இவரால் நேரடியாக நாசம் செய்யப்பட்ட அந்த பெண்ணின் நிலைமை என்னாவது???

சொச்சம் 2 லட்சம்
ஆனால் இந்த இளைஞர் தன்னுடைய விடுதலையை பெரிதாக நினைக்காமல், இழந்த போன 2 வருடங்களையே பெரிதாக நினைத்து புலம்பி உள்ளதுதான் தற்போது பேசுபொருளாகி உள்ளது.. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதாம்.. குழந்தைகளும் இருக்கிறார்கள்.. வயதான தாயும் இருக்கிறார்.. இவரது கேஸை விசாரிப்பதற்காகவே, வழக்கறிஞர் விஜய் சிங் யாதவ் என்பவர் முன்வந்துள்ளார்.. இவர் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "என் கட்சிக்காரர் நஷ்ட ஈடு கோரி தொடுத்த வழக்கு ஜனவரி 10-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.. அவர் கேட்டள்ள நஷ்ட ஈடு ரூ.10 ஆயிரம் கோடியே 2 லட்சமாகும்.. அது என்ன 2 லட்சம் சொச்சம் என்று உங்களுக்கு தோன்றலாம்...

ஜோடணை
அந்த 2 லட்சம் ரூபாய் என்பது, 2 வருட காலம், அவர் இல்லற உறவு சுகத்தை இழந்ததற்காக தனியாக கோரப்பட்டுள்ளது... இந்த 2 லட்சம் தனி இழப்பீடு விவகாரத்தை சோஷியல் மீடியாவில் பலரும் பல்வேறு விதமாக விமர்சித்து வருகின்றனர்... ஆனால், அது நியாயமான கோரிக்கை என்பது, கொஞ்சம் யோசித்து பார்த்தால் தெரியும்" என்கிறார்.. இந்த விசாரணை துவங்குவதற்கு முன்பேயே, வழக்கு மிகப்பெரிய அலசலை ஏற்படுத்தி வருகிறது.. பாலியல் வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டுகளை ஏன் நிரூபிக்க முடியவில்லை.. சம்பந்தப்பட்ட பெண் போலீசில் புகார் தந்தும் ஏன் நடவடிக்கை இல்லை? எப்படி ஆதாரங்கள் இல்லாமல் போயிற்று? கைதான இன்னொரு நபர் எங்கே? என்றெல்லாம் இணையத்தில் கேள்விகள் எழுந்து வருகின்றன.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications