எரிபொருளுக்கு 68% வரியை வாங்கிட்டு.. மக்களுக்கு ஒத்துழைக்க மாட்றீங்களே! மோடியை விளாசும் ராகுல்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: இந்தியாவில் மொத்த எரிபொருள் மீதான வரியில் 68 சதவீதத்தை மத்திய அரசு எடுத்து கொண்டாலும் கூட பிரதமர் நரேந்திர மோடி சரியான ஒத்துழைப்பு கொடுக்காமல், பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை குறைக்க வேண்டும் என மாநில அரசுகளை வற்புறுத்தி வருகிறது என காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடன் நேற்று காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது ‛‛6 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்'' என அவர் கூறினார்.

வாட்வரியை குறைக்க அறிவுரை

வாட்வரியை குறைக்க அறிவுரை

மேலும், நாட்டில் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர்களுக்கு அறிவுரை வழங்கினார். அதாவது பெட்ரோல், டீசல் மீதான மாநிலங்களின் வாட்வரியை குறைக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

மோடி கூறியது என்ன

மோடி கூறியது என்ன

‛‛நாட்டில் தற்போது அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்கு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு கலால் வரியைக் குறைத்திருக்கிறது. மாநில அரசுகளும் இதேபோல பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியைக் குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். சில மாநிலங்கள் செவிசாய்க்கவில்லை. இதனால் பெட்ரோல் விலை ரூ.110-ஐ கடந்துள்ளது. மக்களுக்கு கூடுதல் சுமையை மாநில அரசுகள் ஏற்படுத்தி உள்ளன. இதனால் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, ஜார்க்கண்ட், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் வாட் வரியை குறைத்து அதன் பயனை மக்களுக்கு வழங்க வேண்டும்'' என்றார்.

 ராகுல்காந்தி விமர்சனம்

ராகுல்காந்தி விமர்சனம்

இதற்கு காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதில், ‛‛எரிபொருள் விலையேற்றம், நிலக்கரி தட்டுப்பாடு, ஆக்சிஜன் பற்றாக்குறை ஆகிய அனைத்து பிரச்சனைகளுக்கும் மாநில அரசுகள் தான் குற்றம்சாட்டப்படுகிறது. மொத்த எரிபொருள் வரியில் 68 சதவீதத்தை மத்திய அரசு தான் எடுத்து கொள்கிறது. ஆனாலும் பிரதமர் நரேந்திர மோடி தனக்கான பொறுப்பில் இருந்து விலகி நிற்கிறார். மேலும் மோடியின் கூட்டாட்சி என்பது மாநிலங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் வற்புறுத்தும் வகையில் உள்ளது'' என குற்றம்சாட்டியுள்ளார்.

 மாநிலங்கள் எதிர்ப்பு

மாநிலங்கள் எதிர்ப்பு

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியின் இந்த வேண்டுகோளுக்கு அந்தந்த மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதேபோல் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவும் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்கினால் பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் அனைத்து வரிகளையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+