Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு செல்லும் - ஹைகோர்ட்

Subscribe to Oneindia Tamil

இளங்கலை மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கி தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் இளங்கலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கி கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கக் கோரி தனியார் பள்ளி மாணவர்கள் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனிஸ்வர நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.

7.5% reservation for government school students in MBBS will go - Chennai High Court

அப்போது, தனியார் பள்ளி மாணவர்கள் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு அமலில் உள்ள நிலையில் மீதமுள்ள 31 சதவீத ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 ஒதுக்கீட்டை வழங்குவதன் மூலம் பொதுப்பிரிவில் உள்ள இதர மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது' எனக் குறிப்பிட்டனர்.

மேலும், அரசுப் பள்ளி மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் நிலையை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. அரசு வழங்கும் இலவச பொருள்களை இந்த மாணவர்களும் பெறுகின்றனர்' என்றார்.

இதற்குத் தமிழ்நாடு அரசுத் தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கபில்சிபில், அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவு செய்யும் வகையிலும் ஏற்றத்தாழ்வுகளைக் களையும் வகையிலும் கொண்டு வரப்பட்டதாக வாதிட்டார்.

மேலும், 31 சதவீத இடஒதுக்கீட்டில் இருந்து 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. மொத்த இடங்களில் இருந்துதான் கொடுக்கப்பட்டது. தகுதியான பொதுப்பிரிவு மாணவர்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை. நீட் தேர்வு தகுதியின் அடிப்படையில்தான் இந்த ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது' என்றார்.

தொடர்ந்து மாநில உயர்கல்வித்துறையின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது நியாயமானது எனவும் இந்த விவகாரத்தில் அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் எனப் பிரித்து அதன் அடிப்படையிலேயே இடஒதுக்கீடு வழங்கியது சரிதான்' எனவும் வாதிட்டார்.

இந்த வழக்கில் கடந்த மார்ச் 17 ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

அப்போது பேசிய தலைமை நீதிபதி, 70 ஆண்டுகளாக பின்தங்கியவர்கள் பின்தங்கியவர்களாகவே உள்ளனர். இதனை நாடாளுமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்' என்றார்.

தொடர்ந்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு செல்லும். இளங்கலை மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி இது செல்லத்தக்கது. இந்த இடஒதுக்கீட்டை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' எனக் குறிப்பிட்டார்.

மேலும், இந்த இடஒதுக்கீட்டின் மூலம் எவ்வளவு அரசுப் பள்ளி மாணவர்கள் பலன் பெறுகிறார்கள் என்பதை ஆய்வு செய்ய வேண்டும்' எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

https://www.youtube.com/watch?v=l_CXMiAixag

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+