சரத்பவாருக்கு அடிமேல் அடி.. நாகாலாந்து என்சிபி 7 எம்எல்ஏக்கள் கூண்டோடு அஜித் பவார் கோஷ்டிக்கு தாவல்!
கோஹிமா: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நாகாலாந்து மாநிலத்தின் 7 எம்.எல்.ஏக்கள் அக்கட்சியின் அதிருப்தி கோஷ்டி தலைவரான அஜித்பவாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நாகாலாந்து எம்.எல்.ஏ.க்கள் 7 பேரும் கூண்டோடு அஜித் பவார் கோஷ்டிக்கு தாவி இருப்பது என்சிபி தலைவர் சரத்பவாருக்கு மேலும் நெருக்கடியை அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ்- உத்தவ் தாக்கரே சிவசேனா கூட்டணியில் இடம்பெற்றுள்ள சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) இரண்டாக உடைந்துள்ளது. என்சிபியின் அஜித்பவார் உள்ளிட்டோர் மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக- ஏக்நாத்ஷிண்டே சிவசேனா கூட்டணி அரசில் இணைந்துள்ளனர். தங்களுக்கு 40 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக அஜித்பவார் அணி தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் சரத்பவாரை தொடர்ந்து அஜித்பவார் கோஷ்டி நேரில் சந்தித்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் சரத்பவார் இதனை ஏற்கவில்லை. அத்துடன் பெங்களூரில் கடந்த 18-ந் தேதி நடைபெற்ற காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டத்திலும் சரத்பவார் பங்கேற்றார்.
தற்போது சரத்பவாருக்கு மற்றொரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் என்சிபிக்கு 7 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்த 7 எம்.எல்.ஏக்களும் தற்போது அஜித்பவார் தலைமைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நாகாலாந்தில் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு என்சிபி ஆதரவு தெரிவிக்கிறது. இந்த விவகாரத்தை முன்வைத்துதான் மகாராஷ்டிராவிலும் பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்கிற வாதத்தை முன்வைத்து வருகிறது அஜித்பவார் கோஷ்டி.
நாகாலாந்து மாநிலத்தின் 7எம்.எல்.ஏக்களும் ஒட்டுமொத்தமாக அஜித்பவார் கோஷ்டிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது சரத்பவாருக்கு பெரும் பின்னடைவு என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications