பாதுகாப்பு படை அதிரடி வேட்டை.. சத்தீஸ்கரில் 7 நக்சலைட்கள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கரில் போலீசாருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 7 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்க்கன்ட், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நக்சலைட்கள் மற்றும் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சத்தீஸ்கர் மாநில தலைநகரான ராய்ப்பூரில் இருந்து சுமார் 350 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நாராயண்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட புஷ்பால் காட்டுப் பகுதியில் நகசலைட்கள் நடமாட்டம் இருப்பதாக மாவட்ட போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, நக்சல் ஒழிப்பு சிறப்பு படையினரின் துணையுடன் இன்று காலை அந்த காட்டுப்பகுதியை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தகவலை நக்சல் சிறப்பு பிரிவு டிஜிபி அவாஸ்த்தி தெரிவித்துள்ளார். மேலும் நக்சலைட்டுகளிடம் இருந்த துப்பாக்கிகளும், வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்ததாகவும் டிஜிபி தெரிவித்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications