70 வயது மூதாட்டி பலாத்காரம்.. பிளம்பரின் அட்டகாசம்.. பாட்டி தற்கொலை!
கண்ணூர்: கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் 70 வயது மூதாட்டியை பிளம்பர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த வயதில் இப்படி ஒரு கொடுமையா என்ற வேதனையில் அந்த பாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
வயது வித்தியாசம் இல்லாமல் இப்போது பாலியல் வக்கிரங்கள் அதிகரித்து விட்டன. சிறு குழந்தை முதல் பாட்டிகள் வரை காமக் கொடூரர்கள் விடுவதில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகி விட்டது.

குறிப்பாக கேரளாவில் பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் கூட பிரபல நடிகைக்கு பாலியல் கொடுமை நடந்தது. இந்த நிலையில் அங்கு ஒரு 70 வயது பாட்டியை ஒரு பிளம்பர் பாலியல் பலாத்காரம் செய்யப் போய் தற்போது அந்த பாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணூர் மாவட்டம் இரிட்டி நகரைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த ராஜீவன் என்ற 45 வயது நபரைப் போலீஸார் பிடித்தனர். விசாரணையில் அவர்தான் இந்த கொடுமையைச் செய்தவர் என்று தெரிய வந்தது. இவர் ஒரு பிளம்பர் ஆவார். சம்பவ நாளன்று ராஜீவன் பாட்டி வீட்டுக்கு பிளம்பிங் வேலைக்காக வந்துள்ளார்.
அப்போது பாட்டியை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மூதாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட ராஜீவன் இரிட்டி நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பகுதி செயலாளராக இருக்கிறாராம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications