ஒட்டுத்துணி கூட இல்ல.. "ஆலமரத்தை" சுற்றி சுற்றி வந்த பெண்.. ஷூட் வேற.. கிளம்பியது பூதம்.. புனித பாலி
ஜகார்த்தா: பெண் பிரபலம் ஒருவர் நிர்வாணமாக போட்டோ ஷூட் நடத்திய விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளது.. என்ன நடந்தது? யார் அந்த பெண்?
கடந்த வருடம் இந்தோனேசியாவில் ஒரு சம்பவம் நடந்தது.. அங்குள்ள தீவுக்கூட்டம் மிக முக்கியமானது.. அந்நாட்டின் கலாச்சாரங்கள், நிலப்பரப்புகள், சிறப்பு தன்மைகள் குறித்து சொல்லப்படாத எத்தனையோ பொக்கிஷங்களை வைத்திருக்கும் தீவுகளின் தொகுப்பாகும் அது..
இப்படிப்பட்ட இடத்துக்கு இளம்பெண் ஒருவர் தன்னுடைய கணவருடன் ஹனிமூன் சென்றார்.. ரஷ்யாவை சேர்ந்தவர் அந்த இன்ஸ்டாகிராம் பிரபலம்.. பெயர் அலினா பஸ்லீவா.. அங்குள்ள பாலி தீவுகளுக்கும் கணவருடன் சென்றார்..

நிர்வாண ஷூட்: அப்போது அந்த இடத்தை பார்த்ததுமே அவர் குதூகலம் அடைந்தார். அதனால், திடீரென தன்னுடைய ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்று போட்டோ ஷூட் நடத்திவிட்டார்.. அதை தன்னுடைய சோஷியல் மீடியா பக்கங்களிலும் பதிவிட்டார்.. இதை பார்த்ததுமே பாலி பகுதி மக்கள் கொந்தளித்துவிட்டனர்.. சுற்றுலாவுக்கு பெயர் போன இந்த பாலி தீவில், பெரும்பாலும் வசிப்பது இந்துக்கள்தான்.. தங்களின் நம்பிக்கை உணர்வுகளை, அலினா அவமானப்படுத்திவிட்டதாக குற்றஞ்சாட்டினர்..
அதாவது, அந்த தீவில் உள்ள மரங்கள், மலைகள் போன்ற இயற்கையைதான், அம்மக்களின் கடவுளாக பார்க்கிறார்கள்.. மலைகளையும், மரங்களையும் அவர்கள் கடவுளின் வீடுகள் என்றும் அழைக்கிறார்கள். இந்த தீவில், காயு புனித் (Kayu Putih) என்ற ஒரு பழமையான ஆலமரம் இருக்கிறது.. இந்த மரம், இந்துக்களின் புனித மரமாக கருதப்படுகிறது... அலினா இந்த மரத்தில் சாய்ந்துகொண்டும், கட்டிப்பிடித்துக் கொண்டும் போட்டோ ஷூட் நடத்தியிருந்தார்.. புனித இடத்தில் இப்படி நிர்வாணமாக நின்றது மக்களின் கோபத்தை அதிகப்படுத்தியது..
ஷூட்டிங் பெண்: உடனடியாக அலினாவை வெளியேற்றியதுடன், இந்தோனேசியாவில் 6 மாசத்துக்கு கால் வைக்ககூடாது என்றும், உள்ளூர் மக்கள் புனிதமாகக் கருதும் அந்த இடத்தை தூய்மை செய்யும் பணியில் இவர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.. ஏதோ ஆர்வத்தில் நிர்வாண போட்டோ ஷூட் எடுக்க போய், பிறகு வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டு கொண்டார் அலினா... இப்போதும் இதுபோலவே ஒரு சம்பவம், நடந்து, மிகுந்த பரபரபை கிளப்பி விட்டுள்ளது.
இந்த பெண்ணும் ரஷ்யாவை சேர்ந்தவர்தான்.. இவரும் இதே பாலி தீவுக்கு சென்று நிர்வாணமாக நின்று போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.. இன்ஸ்டாகிரம் இன்புளுயன்சரான அந்த பெண்ணின் பெயர் லூயிசா கோசிக்.. 40 வயதாகிறது.. அடுத்த ஆண்டு டிசம்பர் வரை செல்லுபடியாகும் தற்காலிக கோல்டன் விசாவைப் பயன்படுத்தி, கடந்த ஜனவரி மாதம் பாலிக்கு வந்துள்ளார்.. அங்கிருந்த காயு புனித் என்ற புனித மரத்தில் நிர்வாணமாக போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்...
பாலி புனித மரம்: இதை பார்த்த ட்விட்டர்வாசி ஒருவர், "எங்கள் மண்ணை அவமதிக்கும் மற்ற வெளிநாட்டவர்களுக்கெல்லாம் ஒன்றை சொல்லி கொள்கிறேன், பாலி எங்களுடைய வீடு.. அது உங்களுடையது கிடையாது.. எங்கள் புனித மரங்களில் நிர்வாணப் படங்களை எடுத்து நீங்கள் அழகாக இருப்பதாக காட்டிக் கொள்கிறீர்களா? எங்களுடைய பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் உங்களால் மதிக்க முடியாவிட்டால் தயவுசெய்து உங்கள் நாட்டிற்கே போய்விடுங்கள் என்று காட்டமாக பதிவிட்டிருந்தார்..
இந்த பதிவிற்கு, சம்பந்தப்பட்ட ரஷ்ய பெண் லூயிசா கோசிக் பதில்தந்தார்.. அந்த நிர்வாண போட்டோக்கள் சில வருடங்களுக்கு முன்பு எடுத்ததாகவும், அது புனித மரம் என்று தனக்கு தெரியாது என்றும் விளக்கம் தந்தார்.. ஆனாலும், கடந்த 12ம் தேதி, லூயிசா கோசிக்கை இந்தோனேஷிய அதிகாரிகள் கைது செய்தனர்.. கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் ரஷ்யாவிற்கு நாடு கடத்தநாடு கடத்தப்பட்டார் என பாலியின் சட்ட மற்றும் மனித உரிமைகள் முகமை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இப்படி அடுத்தடுத்த புகார்கள் வெளிவந்தபடி உள்ளதால், ''பாலி-பகுதியில் எது அனுமதிக்கப்படுகிறது? எது அனுமதிக்கப்படவில்லை? என்பது குறித்து எல்லா சுற்றுலாப் பயணிகளுக்கும் தெரியாது. அதனால், இதுபோன்ற சம்பவங்கள் மறுபடியும் நிகழாமல் தடுக்க உள்ளூர் மக்கள், மிகுந்த கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றுஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications