Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு பணத்தில் 75 ஐடி விங்க் ஊழியர்களுக்குச் சம்பளம்! ஜெகன்மோகன் அரசு செய்த தில்லுமுல்லு?

Subscribe to Oneindia Tamil

ஆந்திரா: தனது கட்சியின் ஐடி விங்க் ஊழியர்களுக்கு அரசு பொதுப் பணத்திலிருந்து மாத சம்பளம் கொடுத்ததாக ஜெகன்மோகன் ரெட்டி மீது புதிய புகார் எழுந்துள்ளது. ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து அடுக்கடுக்கான புதிய முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு கடந்த 13 ஆம் தேதி பதவியேற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட என்.டி.ஏ கூட்டணியைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

YSRCP Jaganmohan Reddy

கடந்த 2019இல் நடைபெற்ற சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. மொத்தம் 175 உறுப்பினர்களைக் கொண்ட ஆந்திர சட்டப்பேரவையில் இவரது கட்சி 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.

ஆனால், மாநில அரசியலில் ஒஎஸ்ஆர் ரெட்டிக்குப் பிறகு அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய இவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒஎஸ்ஆர் காங்கிரஸ் வரலாறு காணாத அளவில் 151 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது.

புதியதாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த ஜெகன்மோகன், தெலுங்கு தேசம் கட்சியையும் அதன் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவையும் மிகக் கடுமையாக ஒடுக்கும் முயற்சிகளில் இறங்கினார். அதன் இறுதிக்கட்டமாக நாயுடுவைச் சிறையில் அடைத்தார்.

இந்திய அரசியல் வரலாற்றில் 40 ஆண்டுகள் மேலாக அனுபவம் பெற்ற நாயுடுவைச் சிறைக்குள் தள்ளியதால் அவரது கட்சியைச் சேர்ந்த 2 தொண்டர்கள் மரணமடைந்தனர். அந்தச் செய்தி ஆந்திர அரசியலில் அனுதாப அலையாக வீசியது. அதைப் பயன்படுத்திக் கொண்ட நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி, தனது பிரச்சார பயணத்தைத் தொடங்கினார். இறந்த கட்சித் தொண்டர்களின் குடும்பத்திற்கு நிதியளித்தார்.

இதன் பின்னர் சிறையிலிருந்து வெளியே வந்த நாயுடு, தன் பங்குக்கு ஒரு பயணத்தை மேற்கொண்டார். இறுதியில் சந்திரபாபு கட்சியுடன் ஜனசேனா, பாஜக என வலுவான கூட்டணி உருவானது.

அந்தக் கூட்டணி ஆந்திர சட்டப்பேரவையில் மொத்தம் 164 இடங்களில் வென்றது. தெலுங்கு தேசம் மட்டுமே 135 தொகுதிகளைக் கைப்பற்றியது. கடந்த 2019இல் ஒரே இடத்தில் மட்டுமே வெற்றி பெற்ற ஜனசேனா இந்த முறை 21 இடங்களில் வெற்றிபெற்றதுடன் அதன் நிறுவனரும் தலைவருமான பவன் கல்யாண் துணை முதல்வராகப் பதவியேற்றுள்ளார். பாஜக மொத்தம் 8 இடங்களில் வென்றுள்ளது.
ஆந்திர அரசியலில் தன்னை யாருமே அசைக்கவே முடியாது என்று நம்பிக் கொண்டிருந்த ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சி இந்த 2024 சட்டப்பேரவை தேர்தலில் வெறும் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

இதனால் ஆந்திர அரசியல் களம் ஜெகன்மோகன் ரெட்டியால் அரசியல் ரீதியாகப் பழிவாங்கப்பட்ட சந்திரபாபு நாயுடுவின் கைக்குச் சென்றுள்ளது. கூடவே மத்திய அரசின் அங்கம் வகிக்கும் அளவுக்கு நாயுடு கிங் மேக்கராக மாறியுள்ளார்.

இந்நிலையில் முதல்வராகப் பதவியேற்ற நாயுடு, கடந்த ஆட்சியில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் பற்றிய விவரங்களைத் தோண்ட ஆரம்பித்துள்ளார். அந்தத் தேடலில் ஜெகன்மோகன் ரெட்டி 500 கோடியில் சொகுசு பங்களாவைக் கட்டி, அதைத் தனது கேம்ப் ஆபீசாக பயன்படுத்தத் திட்டமிட்டிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விசாகப்பட்டினத்தில் ருஷிகொண்டா அரண்மனை பற்றிய வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதனைத் தொடர்ந்து ஜெகன் ஆட்சியின் பல முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரிசையாக வரத் தொடங்கியுள்ளன.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் மற்றும் தொழிலாளர் பிரிவான யுவஜன ஸ்ராமிக விவசாயி காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் 77 பேருக்கு ஆந்திர மாநில திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (ஏ.பி.எஸ்.எஸ்.டி.சி ) மூலம் மாதச் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது கண்டறியப்பட்டுள்ளது.

YSRCP Jaganmohan Reddy

அரசு பொதுப் பணத்திலிருந்து இந்தச் சம்பளத்தைக் கட்சியினருக்கு வழங்கியுள்ளது ஜெகன்மோகன் அரசு.

அதாவது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஐடி விங்க் நிர்வாகிகள் 77 பேர் அரசு கார்ப்பரேஷன் நிறுவனமான ஏ.பி.எஸ்.எஸ்.டி.சி மூலம் மாதச் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் யாருமே கார்ப்பரேஷன் ஊழியர்கள் இல்லை. வேலையே செய்யாதவர்களுக்கு கார்ப்பரேஷன் ஊதியம் கொடுத்துள்ளது.

இப்போது ஆட்சி மாறியுள்ளதால், இந்தப் புகார்களை அரசு ஊழியர்கள் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளனர். மேலும் சில ஊழல்கள் நடந்துள்ளது பற்றி வாய் திறக்க ஆரம்பித்துள்ளனர்.

சல்லா மதுசூதன் ரெட்டி ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் சமூக ஊடகப் பிரிவின் தலைவராக இருந்தார். அவரை 2021 ஆம் ஆண்டு ஜெகன்மோகன் அரசு ஆந்திர மாநில திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (APSSDC) தலைவராகவும் திறன் மேம்பாடு குறித்த ஆலோசகராகவும் நியமித்தது.
.
இதன் தலைவராக இவர் செயல்பட்ட காலத்தில் பில் க்ளீயர் செய்ய மட்டும் 30 லட்சம் ரூபாய் கமிஷன் வாங்கியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அரசு பணத்தை முறைகேடாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சமூக ஊடகப் பிரிவுக்குச் செலவிட்டுள்ளார். அதற்காக அவர் மீது விசாரணைக்கு சந்திரபாபு நாயுடு அரசு உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏபிஎஸ்எஸ்டிசி மூலம் பயனடைந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவில் பணியாற்றிய பலர் ஏற்கனவே தங்கள் ஊடகக் கணக்குகளைச் செயலிழக்கச் செய்துவிட்டு, தலைமறைவாகிவிட்டனர்.

இவர்களில் சிலர் நீதித்துறையைத் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக முன்பே கைது செய்யப்பட்டு தற்போது பிணையிலிருந்து வருகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. .

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+