இலங்கையில் இந்திய நிறுவனத்தில் சித்ரவதை- வட இந்திய தொழிலாளர்கள் உடனே மீட்கப்படுவர்: மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இலங்கையில் இந்திய ஸ்டீல் நிறுவனத்திடம் சித்ரவதைகளை அனுபவித்து வரும் 77 வட இந்திய தொழிலாளர்கள் உடனடியாக மீட்கப்படுவர் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளித்துள்ளார்.

இலங்கையில் புவால்கா ஸ்டீல் என்ற இந்திய நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் 77 வட இந்திய தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் 44 பேர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்த தொழிலாளர்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அத்துடன் அவர்களது பாஸ்போர்ட், பணிபுரியும் விசா ஆகியவற்றையும் தொழிற்சாலை நிர்வாகமே வாங்கி வைத்துக் கொண்டு ஊதியம் கேட்டால் சிறைக்குத்தான் போக வேண்டும் என்று மிரட்டி வந்துள்ளது.

இது தொடர்பாக தங்களது உறவினர்களுக்கு தொழிலாளர்கள் தகவல் தெரிவித்தனர். பின்னர் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து இலங்கையில் உள்ள இந்தியத் தூதரை தொடர்பு கொண்டு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசினார். மேலும் 77 இந்தியர்களும் நாடு திரும்ப உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருப்பதாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+