சிறுமி கனவில் வந்த சிவலிங்கம்! ‛அதிர்ஷடம்’ என 500 கிமீ போய் மொத்த குடும்பமும் செய்த செயலை பாருங்க
காந்தி நகர்: குஜராத்தில் சிறுமியின் கனவில் பழம்பெருமை வாய்ந்த கோவிலின் சிவலிங்கம் வந்தது. இதையறிந்த குடும்பத்தினர் அதிர்ஷ்டம் அடிக்கும் என்று 500 கிலோமீட்டர் பயணித்து சில நாட்கள் தங்கி கோவிலில் இருந்து வந்த சிவலிங்கத்தை திருடி வந்து மகாசிவராத்திரி நாளில் வீட்டில் பிரதிஷ்டை செய்ய முயன்றபோது போலீசில் சிக்கினர். தற்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலம் துவரகாவில் ஹர்ஷத் என்ற இடம் உள்ளது. இங்கு பழமைவாய்ந்த பீத் பஞ்சன் மகாதேவ் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்த சிவலிங்கம் திடீரென்று மாயமானது.

இதுபற்றிய புகாரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின்போது போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதாவது குஜராத் மாநிலம் சபார்கந்தா மாவட்டம் ஹிமாத்நகரை சேர்ந்த ஒரு குடும்பம் தான் சிவலிங்கத்தை திருடி சென்றது போலீசார் அறிந்தனர்.
இதையடுத்து போலீசார் ஹிமாத் நகருக்கு சென்று விசாரித்தனர். அப்போது ஹிமாத் நகரை சேர்ந்த மகேந்திர மக்வானா என்பவர் தான் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து சிவலிங்கத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து மகேந்திர மக்வானா, அவரது குடும்பத்தை சேர்ந்த வனராஜ், மனோஜ், ஜகத், 3 பெண்கள் உள்பட மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது. அதாவது மகேந்திர மக்வானாவின் சகோதரின் மகள் சமீபத்தில் ஒரு கனவு வந்துள்ளது. அந்த கனவில் துவரகாவில் ஹர்ஷத்தில் உள்ள பழமைவாய்ந்த பீத் பஞ்சன் மகாதேவ் கோவிலின் சிவலிங்கம் தெரிந்துள்ளது.
மேலும் அந்த சிவலிங்கத்தை வீட்டுக்கு கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தால் துன்பங்கள் நீங்கி அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பது போல் அவர் கனவு கண்டுள்ளார்.இதுபற்றி அவர் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதையடுத்து தான் மகேந்திர மக்வானாவின் குடும்பத்தினர் ஒன்றாக இணைந்து சிவலிங்கத்தை திருட திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக அவர்கள் தங்களின் பகுதியில் இருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள துவரகாவில் ஹர்ஷத் என்ற இடம் உள்ளது. இங்கு பழமைவாய்ந்த பீத் பஞ்சன் மகாதேவ் கோவிலில் அருகே பல நாட்கள் தங்கியிருந்துள்ளனர். அதன்பிறகு அவர்கள் ஆள்நடமாட்டம் இல்லாதபோது கோவிலில் நுழைந்து சிவலிங்கத்தை திருடி வீட்டுக்கு வந்துள்ளனர்.
மகா சிவராத்திரி தினத்தில் அந்த சிவலிங்கத்தை வீட்டில் வைத்து பிரதிஷ்டை செய்ய தயாராக இருந்த நிலையில் போலீசார் மொத்த குடும்பத்தையும் கைது செய்துள்ளனர். சிறுமியின் கண்ட கனவால் மொத்த குடும்பமே கோவிலில் இருந்து சிவலிங்கத்தை திருடி போலீசில் சிக்கி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications