இந்தியாவில் வாக்காளர்கள் எண்ணிக்கை 81.4 கோடி: 5 ஆண்டுகளில் 10 கோடி அதிகரிப்பு!
டெல்லி: நாடு முழுவதும் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 81.4 கோடி என்றும் கடந்த தேர்தலைவிட 10 கோடி வாக்காளர்கள் இம்முறை அதிகம் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் லோக்சபா தேர்தல் அட்டவணையை வெளியிட்டு சம்பத் கூறியதாவது:
தற்போதைய லோக்சபா தேர்தல் கால அட்டவணை பல்வேறு காரணிகளை ஆராய்ந்து முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்த வாக்காளர்கள் 81.4 கோடி பேர் உள்ளனர்.

கடந்த தேர்தலைவிட இம்முறை 10 கோடி வாக்காளர்கள் அதிகம். நாடு முழுவதும் 9 லட்சத்து 30 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த முறையை இம்முறை 12% இது அதிகம்.
லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவு இயந்திரங்களில் நோட்டா பட்டன் அறிமுகப்படுத்தப்படுகிறது. நாடு முழுவதும் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும்.
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க நாடு முழுவதும் 9-ந் தேதி சிறப்பு முகாம் நடத்தப்படும். இம்முறை புகைப்படம் ஒட்டிய பூத் சிலிப்புகள் வழங்கப்படும். இந்த தேர்தலில் வேட்பாளர்களின் செலவுகள் தீவிரமாக கண்காணிக்கப்படும்.
தேர்தலை அச்சமின்றி நேர்மையாக தேர்தல் அதிகாரிகள் நடத்த வேண்டும்.
இவ்வாறு தேர்தல் ஆணையர் சம்பத் தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications