Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"புள்ள மாதிரி வளர்த்தேன்.." மரத்தை வெட்டிய மர்ம நபர்கள்.. துடிதுடித்து போன 85 வயது மூதாட்டி! சோகம்

Subscribe to Oneindia Tamil

ராய்ப்பூர்: 85 வயது மூதாட்டி அரச மரம் ஒன்றை சொந்தப் பிள்ளை போல வளர்த்து வந்துள்ளார். ஆனால், பணத்தாசை பிடித்த இருவர் இரவோடு இரவாக அந்த மரத்தை வெட்டி சாய்த்துள்ளனர். தான் பாசமாக வளர்த்த மரம் வெட்டப்பட்டதை பார்த்து அந்தப் பாட்டி கதறி அழுதுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

நம்மில் பலரும் நாய், பூனை, மீனை வளர்ப்பார்கள். இன்னும் சிலர் செடி, கொடிகளையும் பாசமாக வளர்ப்பார்கள். அவர்கள் அந்தச் செடி கொடிகளைக் குடும்பத்தில் ஒருவராகவே பார்ப்பார்கள். அதற்கு எதாவது ஆனால் அவர்களால் அதைத் தாங்கவே முடியாது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

85-Year-Old Woman Breaks Down and cried as her 20-Year-Old Peepal Tree is Illegally Cut Down

கதறி அழுத மூதாட்டி

85 வயது மூதாட்டி ஒருவர், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வளர்த்து வந்த அரச மரம் சட்டவிரோதமாக வெட்டப்பட்டதால் கதறி அழுதார். சத்தீஸ்கர் மாநிலம் கைராகர் மாவட்டத்தில் சாரா கோண்டி கிராமத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. 85 வயதான அந்த மூதாட்டி கதறி அழுத வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தியோலா பாய் என்ற அந்த மூதாட்டி, சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டு முற்றத்தில் ஒரு சிறிய அரச மரக்கன்றை நட்டுள்ளார். மேலும், அவர் அதைச் சொந்தக் குழந்தையைப் போல வளர்த்து வந்தார். அந்த மரக்கன்றிற்குத் தினமும் தண்ணீர் ஊற்றிப் பராமரித்து வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எங்குச் சென்றாலும், உடல் நலக்குறைவு ஏற்பட்டாலும் அந்த மரத்தைப் பார்த்துக் கொள்ள மட்டும் அந்த மூதாட்டி தவறியதே இல்லையாம்.

கண்ணீர் விட்டுக் கதறல்

இந்தச் சூழலில் தான் அந்த மரம் சில ஆசாமிகளால் வெட்டப்பட்டது. பணத்தாசை பிடித்த மர்ம நபர்கள் சிலர், அரச மரத்தை வெட்டியதாகக் கூறப்படுகிறது. காலையில் எழுந்து பார்த்தபோது சொந்தப் புள்ளை மாதிரி வளர்த்த மரம் முழுமையாக வெட்டப்பட்டு இருந்ததைப் பார்த்து அந்த மூதாட்டி மனம் உடைந்து போய்விட்டார். மரத்தின் பக்கத்தில் அமர்ந்து அவர் கண்ணீர் விட்டு அழுதார். அவரை சமாதானம் செய்ய அங்கிருந்தவர்கள் முயன்றனர். இருப்பினும், அவரால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதார்.

இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியது. வெட்டப்பட்ட மரத்தைப் பார்த்து மூதாட்டி கதறித் துடித்தது, நெட்டிசன்களை கலங்க வைத்தது. இதற்கிடையே மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு இது தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ளார். அவர் மேலும், "இது இதயத்தை நொறுக்கும் காட்சி. 20 ஆண்டுகளுக்கு முன்பு தான் நட்ட அரச மரம் வெட்டப்பட்டதால் மூதாட்டி கதறி அழுகிறார். சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

என்ன நடந்தது?

இது தொடர்பாகக் கிராமவாசி ஒருவர் போலீஸ் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார். அதில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி காலையில், கைராகர் என்ற பகுதியைச் சேர்ந்த இம்ரான் மெமோன் என்பவர் தனது கூட்டாளியுடன் சேர்ந்து மரத்தை வெட்ட முயன்றுள்ளார். இருப்பினும், கிராம மக்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால், அடுத்த நாள் காலையில் அந்த மரம் அடியோடு வெட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கைராகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிஎன்எஸ் சட்டப் பிரிவுகள் 298 மற்றும் 3(5) இன் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையைத் தொடங்கினர். கிராமவாசி கொடுத்த தகவலின் அடிப்படையில் இருவரையும் கைது செய்தனர்.

இருவர் கைது

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் மரத்தை வெட்டியதை ஒப்புக் கொண்டனர். இம்ரான் சமீபத்தில் அருகே ஒரு இடத்தை வாங்கியதாகவும் அதன் முன்புறம் உள்ள அரசு நிலத்தைச் சமன் செய்யவே மரத்தை வெட்டியதாக ஒப்புக் கொண்டுள்ளனர். இதற்காக இம்ரானுக்கு லால்பூரைச் சேர்ந்த பிரகாஷ் கோஸ்ரே என்பவர் உதவியுள்ளார்.

பிரகாஷ் கட்டிங் மெஷின் மூலம் இரவோடு இரவாக மரத்தை வெட்டியதாகவும், அப்போது வேறு யாராவது வருகிறார்களா என்பதை இம்ரான் பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். மரத்தை வெட்டி, அதை அப்புறப்படுத்திய பிறகு இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். மேலும், கட்டிங் மெஷினை ஆற்றில் வீசியுள்ளனர். அதைக் கண்டுபிடிக்கும் பணியில் இப்போது போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+