என்னையா காசு காசு பணம்.. இந்தா வச்சுக்கோங்க! 5 ஏக்கரை நன்கொடை தந்த மூதாட்டி! எதுக்கு தெரியுமா? செம
புவனேஸ்வர்: ஒடிசாவில் 5 ஏக்கர் நிலத்தை விளையாட்டு மைதானம் அமைக்க 95 வயது மூதாட்டி தானமாக வழங்கி உள்ளார். இவர் ஏற்கனவே பள்ளி, கல்லூரி, கோவில் கட்டுவதற்கு சொந்த நிலத்தை வழங்கிய நிலையில் இப்போது மீண்டும் தாராளம் காட்டி கவனம் பெற்றுள்ளார்.
ஒடிசாவின் நுவாபாட் மாவட்டம் அருகே சிங்கஜார் எனும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் நிலாம்பர். இவரது மனைவி பெயர் சாவித்ரி மஜ்ஹி. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சாவித்ரி தனது கணவரை இழந்தார். தற்போது சாவித்ரிக்கு 95 வயது ஆகிறது.

சாவித்ரிக்கு சமூகத்தில் தான் பட்ட கஷ்டங்களை மற்றவர்கள் படக்கூடாது என்ற எண்ணம் என்பது உண்டு. தனது கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு முறையான கல்வி கிடைக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டி வருவார்.
அதோடு விளையாட்டிலும் அவருக்கு அதிக ஈடுபாடு உண்டு. வயது முதிர்வு காரணமாக அவரால் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாட முடியாவிட்டாலும் கூட அவர் ஊக்கப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். தனது வீட்டு அருகே கிரிக்கெட் உள்பட பிற விளையாட்டுகளை விளையாடும் சிறுவர்களை ரசிப்பார். அதுமட்டுமின்றி தன்னால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு சாவித்ரி வழங்கி வந்தார்.
இந்நிலையில் தான் சாவித்ரியின் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் கிரிக்கெட் நன்றாக விளையாடுவார்கள். அதோடு அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் மாநிலங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை நடத்துவார்கள். புத்தராஜா கிரிக்கெட் கோப்பைக்கான போட்டியாக அது அமையும். இந்த போட்டி என்பது ஒவ்வொரு ஆண்டும் தனியார் விளையாட்டு மைதானத்தில் தான் நடக்கும். ஊரில் விளையாட்டு மைதானம் அமைக்க இடம் இல்லை.
இதனால் சாவித்ரியின் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் தனியார் மைதானத்தில் தான் போட்டியை நடத்தி வருகிறார்கள். அதேபோல் கால்பந்து, கபடி போட்டியையும் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு சொந்த ஊரில் மைதானம் அமைத்து அதில் போட்டிகளை நடத்த வேண்டும் என்பது ஆசையாக இருந்தது. ஆனால் நிலம் என்பது இல்லை.
இப்படியான சூழலில் தான் மைதானம் அமைக்க 95 வயது நிரம்பிய சாவித்ரி தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கினார். இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ஹேப்பியாகி உள்ளனர். அதோடு சாவித்ரி வழங்கிய நிலத்தில் அரசு சார்பில் மைதானம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
தற்போது விளையாட்டு மைதானத்துக்கு 5 ஏக்கர் நிலம் கொடுத்த சாவித்ரி ஒரு கொடை வள்ளல் ஆவார். இதற்கு முன்பும் தொடக்கப்பள்ளி, உயர்நிலை பள்ளி, கல்லூரி, கோவில் கட்டுவதற்கான தனது சொந்த நிலத்தை வழங்கியிருந்தார். இதுபற்றி சாவித்ரி கூறுகையில்,‛‛விளையாட்டில் பங்கேற்கு எனது கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் விளையாடுவதை நான் பெருமையாக பார்த்து ரசிப்பேன். என் கிராமத்தை சேர்ந்தவர்கள் வெற்றி பெறும்போது அது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. சிறுவர்கள் நன்றாக விளையாடி, உடற்பயிற்சி செய்து உடலை திடகாத்திரமாக வைத்து கொள்ள வேண்டும். இதற்கு நான் வழங்கிய இடம் அவர்களுக்கு உதவும் என்று நம்புகிறேன். இதனால் தான் அந்த இடத்தை வழங்கி உள்ளேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications