புற்றுநோயால் பாதிக்கப்பபட்ட 13 வயது சிறுமி 8 ஆசிரியர்களால் பலாத்காரம்.. ராஜஸ்தானில் பயங்கரம்
ராஜஸ்தான் மாநிலத்தில் 13 வயது சிறுமி ஒருவர் 8 ஆசிரியர்களால் ஓராண்டாக பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமி ஒருவர் 8 ஆசிரியர்களால் ஓராண்டாக பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பிகானரின் நோகாவை சேர்ந்த மாணவி 2015-ம் ஆண்டு தனியார் பள்ளியில் 8 ஆசிரியர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். பள்ளி நேரம் முடிந்த பின்னர் சிறப்பு வகுப்பு உள்ளதாக சொல்லி மாணவியை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.
இதனை அவர்கள் வீடியோவும் எடுத்து உள்ளனர். வீடியோவை காட்டி சிறுமியை மிரட்டி தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்து வந்து உள்ளனர்.

கர்ப்பத்தை கலைத்த கொடூரர்கள்
இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். மருந்துகளை வாங்கிக்கொடுத்து சிறுமியின் கர்ப்பத்தையும் அவர்கள் கலைத்துள்ளனர்.

பெற்றோரையும் மிரட்டிய ஆசிரியர்கள்
இந்த விவகாரம் கடந்த 2016ஆம் ஆண்டுதான் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. அப்போது 8 ஆசிரியர்களும் சிறுமியின் பெற்றோரை மிரட்டியுள்ளனர். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமியை பார்க்கவும் அவர்கள் அனுமதிக்கவில்லை எனத் தெரிகிறது. ஊருக்கு தெரிந்தால் கேவலமாக பேசுவார்கள் என்பதால் சிறுமியின் பெற்றோர் புகார் அளக்காமல் இருந்து வந்துள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமி
இந்நிலையில் ஆசிரியர்களின் கொடுமை அதிகரிக்கவே பொறுத்துக்கொள்ள முடியாத அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த ஓராண்டாக ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. அவருக்கு மருத்துவமனையில் தற்போது சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

முதல்வர் விசாரணையை கண்காணிக்கிறார்
ராஜஸ்தான் மாநில மந்திரி ராஜேந்திர ரத்தோர் பேசுகையில், "இது மிகவும் அதிர்ச்சிகரமான சமபவம். மிகவும் வருத்தமானது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும், முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா விசாரணையை கண்காணித்து வருகிறார்" என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications