அம்மா வயசு இருக்கும்..கட்டுமான தளத்தில் கதறிய மூதாட்டி! கொஞ்சமும் இரங்காத கொடூரன்! பதறிப் போன போலீஸ்
போபால் : மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே கட்டுமான தளத்தில் பணியாற்றி வந்த 48 வயதான பெண்ணை 28 வயது இளைஞர் கடத்திச் சென்றதோடு அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் 2020ஆம் ஆண்டைக் காட்டிலும், 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில், பெண்கள் குறிப்பாக 18 வயதுக்கு குறைவான சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 46% அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டை விட 2021ஆம் ஆண்டில், ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை 13,618 குற்றங்கள் பெண்களுக்கு எதிராக நடந்துள்ளது. அதேபோல், 2022ஆம் ஆண்டில் ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை பெண்களுக்கு எதிராக 19,953 குற்றங்கள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

குற்றங்கள் அதிகரிப்பு
வட மாநிலங்களான ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கைக்கு அளவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும், அந்த அளவுக்கு நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றனர். குறிப்பாக மத்திய பிரதேசத்தில் சீரான எண்ணிக்கையில் பாலியல் பலாத்கார சம்வங்கள் அதிகரித்து வருவது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

பாலியல் வன்கொடுமை
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே கட்டுமான தளத்தில் பணியாற்றி வந்த 48 வயதான மூதாட்டியை 28 வயது இளைஞர் கடத்திச் சென்றதோடு அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 25, 2021 அன்று ஆக்ரிதி ஈகோ சிட்டிக்கு அருகிலுள்ள அறையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஆனால் அந்த பெண்ணின் அடையாளம், வாக்குமூலம் ஆகிய விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.

அதிர்ச்சி சம்பவம்
ஷாபுராவில் கட்டுமான தளத்தில் பணிபுரிந்த போது 48 வயது பெண் ஒருவர் 28 வயது இளைஞரால் சிறைபிடிக்கப்பட்டு, தாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பின்னார் அந்த இளைஞரிடம் இருந்து தப்பிய அவர் மே 22ஆம் தேதி அன்று சியோனி மகளிர் அமைப்பில் புகார் அளித்தார். இதனையடுத்து சியோனி போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், பின்னர் குற்றம் நடந்த ஷாபுரா காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

போலீசார் விசாரணை
கடுமையாக தாக்கப்பட்டு உயிர் பிழைத்த அந்த பெண் சியோனியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், ஒரு வருடத்திற்கு முன்பு ஜூலை 2021இல், போபாலில் உள்ள ஒரு கட்டுமான தளத்தில் வேலைக்குச் சென்றதாக கூறப்படுகிறது. பிபரியா கிராமத்தில் வசிக்கும் குற்றம் சாட்டப்பட்ட தர்மேந்திர சந்திரவன்ஷி, ஷாபுராவில் உள்ள ஒரு அறையில் அந்த பெண்ணை சிறைபிடித்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அப்போது அவரை தாக்கியுள்ளார் எனவும் போலீசார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications