ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக அழைத்து சென்று 6 வயது சிறுமி பலாத்காரம்.. முகத்தை சிதைத்து கொன்றவன் கைது!
மத்திய பிரதேசத்தில் ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக கூறி 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

குவாலியர்: மத்திய பிரதேசத்தில் ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக கூறி 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் மாவட்டம் மொரினா பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் குவாலியர் நகரில் நடக்கும் உறவினர் ஒருவர் திருமணத்திற்கு அண்மையில் சென்றனர். அவர்கள் தங்களின் 6 வயது மகளையும் உடன் அழைத்து சென்றனர்.

குழந்தை தன்பாட்டுக்கு
திருமண கொண்டாட்டங்களில் ஈடுபட்டு இருந்த தம்பதியினர் குழந்தையை கவனிக்கவில்லை. குழந்தை தன்பாட்டுக்கு விளையாடி கொண்டிருந்தது.

சிசிடிவி காட்சிகள்
சற்று நேரத்தில் தனது மகளை தேடிய பெற்றோர் மகளை காணவில்லை என பதற்றமடைந்து போலீஸில் புகார் அளித்தனர். இதையடுத்து திருமண வீட்டிற்கு வந்த போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர்.

ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக
அதில் பல திடுக்கிடும் காட்சிகள் வெளியாகியதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தனது பெற்றோருடன் திருமணத்திற்கு வந்திருந்த சிறுமியை ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி இளைஞர் ஒருவர் வெளியே தனியே அழைத்து செல்கிறார்.

யாருமற்ற தெருவில்
இரவு 11.30 மணிக்கு குழந்தை ஒரு நபருடன் வெளியே வருகிறாள். யாரோ ஒரு நபருடன் வேகவேகமாக அந்த குழந்தை யாருமற்ற தெருவில் நடந்து செல்கிறாள்.

ஓடி வரும் குழந்தை
அந்தக் காட்சியில் அந்த நபரும் குழந்தையுடன் நடந்து செல்கிறான். சிறிது நேரத்திற்கு பிறகு திடீரென அந்த சிறுமி அவனிடம் இருந்து தப்பி திரும்பி அதே வழியில் ஓடி வருகிறாள்.

பின்னாலேயே செல்கிறாள்
ஆனால் அவன் அந்த சிறுமியை மீண்டும் அழைக்கிறான். எதையோ பார்த்து பயந்து போன அந்த 6 வயது சிறுமி அவன் பின்னாலேயே செல்கிறாள்.

வீடியோ பதிவு
இதைத்தொடர்ந்து அதிகாலை 2.30 மணியளவில் குற்றவாளி மட்டும் தனியே வருகிறான். இந்தக் காட்சியும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

வனப்பகுதியில் உடல்
இந்த வீடியோவின் அடிப்படையில் சிறுமியை போலீசார் அவர் அழைத்து செல்லப்பட்ட வழியில் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் திருமணம் நடந்த இடத்திலிருந்து 500மீ தொலைவில் உள்ள வனப்பகுதியில் சடலமாக முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

கொடூரமான முறையில் பலாத்காரம்
சிறுமி கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு முகத்தை சிதைத்து கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. வீடியோ காட்சியின் அடிப்படையில் போலீசார் திருமண நிகழ்ச்சிக்கு சமைக்க வந்தவர்களில் ஒருவனை கைது செய்துள்ளனர்.

வேறு யாருக்கும் தொடர்பு?
இதுகுறித்து அவனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலம் இந்த கொடூர சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications