கேரள வெள்ளத்தில் சிக்கி சின்னாபின்னமான பங்களா!.. எப்படியிருந்தது இப்படி ஆகிவிட்ட சோகம்!
Recommended Video

பத்தினம்திட்டா: கேரளா வெள்ளத்தில் சிக்கி ரண்ணியில் ஒரு பங்களா சின்னாபின்னமாகியுள்ளது.
கேரளாவில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது. இதனால் அங்குள்ள 14 மாவட்டங்களிலும் தண்ணீர் சூழ்ந்தது. நிலச்சரிவும் ஏற்பட்டது.
இந்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சிக்கி 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். ஏராளமானோர் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்துவிட்டனர்.

பயங்கர சேதம்
19,512 கோடி அளவுக்கு மாநிலத்தில் சேதம் ஏற்பட்டுவிட்டதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். பத்தினம்திட்டா, செங்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

முகப்பு தோற்றம்
பத்தினம்திட்டா மாவட்டத்தில் ஒரு சிறிய நகரம் ரண்ணி ஆகும். இங்கு ஒரு பங்களா வீடு மழை வெள்ளத்தால் சிதிலமடைந்து சரிந்து காணப்படுகிறது. இதே போல் அழகிய கண்ணாடி வேலைப்பாடுகள் கொண்ட வீட்டின் உட்புறமும் மேற்கூரையும் விரிசல் அடைந்துள்ளது.

சரிந்த நிலையில்
அந்த வீடானது சீட்டு கட்டுபோல் சரிந்த நிலையில் காணப்படுகிறது. வீட்டின் சுவர்கள் பில்லை பில்லையாக பெயர்ந்து காணப்படுகிறது. இதை பார்க்கும் போது எப்படி வயிற்றை கட்டி வாயை கட்டி இந்த பங்களாவை உருவாக்கியிருப்பார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.

எப்படியிருந்த வீடு இப்படி ஆகிவிட்டது
இந்த வீடு இதற்கு முன்னர் எப்படி அழகாக காட்சியளித்தது என்பதற்கு இந்த படம்தான் உதாரணம். எத்தனை மிடுக்காக பொலிவுடன் காட்சியளித்த இந்த வீடு தற்போது வெள்ளத்தால் சின்னாபின்னமாகியுள்ளது அந்த வீட்டினரை மட்டுமல்லாமல் படத்தை பார்க்கும் ஒவ்வொருவரையும் வேதனை அடைய செய்கிறது.

வீட்டு உபயோக பொருட்கள் நாசம்
இதேபோல் கேரளத்தில் மற்றொரு வீட்டில் சோபா, கட்டில், நாற்காலிகள், பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் மழை நீரில் நாசமடைந்து அவை வெளியே கொண்டு வந்து போடப்பட்டுள்ளன. இந்த நிலை சரியாக இன்னும் எவ்வளவு நாட்கள் ஆகுமோ என்று மக்கள் கவலையில் உள்ளனர்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications