Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குஜராத் தொழிலதிபருக்கு குவியும் பாராட்டு.. சொந்த கிராம குழந்தைகளின் கல்விக்காக செய்த தரமான சம்பவம்

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: அமெரிக்காவில் தொழில் செய்து வரும் தொழிலதிபர் ஒருவர் குஜராத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள் அனைவரும் இலவச கல்வி பெற வேண்டும் என்பதற்காக 100 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கல்வி ஒரு குடும்பத்தை மட்டுமல்ல ஒரு தலைமுறையையே மாற்றிவிடும். அந்த வகையில், அமெரிக்காவில் தொழில் செய்து வரும் மகேந்திரா மேக் படேல் என்பவர் குஜராத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தைச் சேர்ந்த அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கல்வி வழங்குவதற்காக ரூ. 100 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

gujarat business man education

குஜராத் மாநிலம், நிஸ்ரயா கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் மகேந்திரா மேக் படேல் (86). மகேந்திரா டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவுப் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். அமெரிக்காவில் தொழில் நிறுவனம் ஒன்றை அமைத்து வெற்றிகரமாக அதனை நடத்தி வருகிறார். இவர் தான் பிறந்த ஊரான நிஸ்ரயா கிராமத்தில் அதிநவீன உயர்நிலைப் பள்ளி கட்டும் உன்னதமான பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இப்பள்ளியில் சிறந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கான அனைத்து வசதிகளையும் முறையாக செய்து கொடுக்கும் வகையில் தீவிரமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமல்லாமல் தனது கிராமத்தைச் சேர்ந்த அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்ற தனது ஆசையை நிறைவேற்றும் வகையில் மாணவர்களின் கல்விக்காக ரூ. 100 கோடி நிதியுதவியையும் அளித்துள்ளார்.

இப்பணிகள் குறித்து கன்சல்ட் ஆண்ட்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவரான மகேந்திரா மேக் படேல் கூறியுள்ளதாவது: நிஸ்ரயா கிராமத்தில் உயர்நிலைப் பள்ளிகள் எதுவும் இல்லை. இதனால் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் உயர்நிலைப் படிப்பு படிக்க அருகில் உள்ள கிராமங்கள் அல்லது நகரங்களுக்குத்தான் செல்லும் நிலை உள்ளது.

இந்தியன் வங்கியில் 75 கோடி ரூபாய் வைப்பு நிதி செய்திருந்தேன். அந்தப் பணத்தை தற்போது நிஸ்ரயா கிராமத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்த முடிவு செய்திருக்கிறேன். எங்கள் கிராமத்தில் உள்ள குழந்தைகள் அனைவரும் உயர்கல்வி பெறுவதற்கு சொந்த கிராமத்திலேயே பள்ளி கட்டிக் கொடுக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவு. அதே சமயம் அவர்கள் அந்த கல்வியை இலவசமாக கற்க வேண்டும் என்றார்.

மகேந்திரா மேக் படேல் தனது சொந்த கிராமத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் 70 பேருக்கு அவர்களின் கல்லூரிப் படிப்புக்காக 30 லட்சம் ரூபாய் நிதி உதவியை கடந்த ஆறு மாதங்களில் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. கல்வி மட்டுமல்லாமல் அந்த கிராமத்தில் வடிகால் அமைப்பு, சூரிய சக்தியால் இயங்கும் தெருவிளக்குகள், சி.சி.டி.வி., கேமராக்கள், அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகளை கட்டிக் கொடுத்து வருகிறார்.

தான் பெரிய தொழிலதிபராக உயர்ந்த போதிலும் பிறந்து வளர்ந்த சொந்த கிராமத்தை மறக்காமல் அக்கிராம மக்களின் வளர்ச்சிக்காக தொழிலதிபர் செய்து வரும் செயல் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குழந்தைகளின் கல்விக்காக ரூ. 100 கோடி நிதியுதவி அளித்துள்ள மகேந்திரா மேக் படேலுக்கு அனைத்து தரப்பு மக்களும் பாராட்டு மற்றும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+