துப்பாக்கியை சுத்தம் செய்த போது தோட்டா வெடித்து கமாண்டோ வீரர் பலி.. பெண் எஸ்.ஐ. காயம்..
பெங்களூரு: கூட்லு சி.டி.சி, மையத்தில், கைக் துப்பாக்கியை ஏட்டு ஒருவர் சுத்தம் செய்த போது, தோட்டா பாய்ந்து மற்றொரு ஏட்டு பலியானார். பெண் எஸ்.ஐ., காயமடைந்தார்.
கடந்த, 2 ம் தேதி காலை, சி.டி.சி., - மத்திய பயங்கரவாத தடுப்பு மற்றும் கே.எஸ்.ஆர்.பி.., - கர்நாடகா மாநில தொழிற்சாலை பாதுகாப்பு படை ஏட்டுகள் பயிற்சி முடித்து, கூட்லு சி.டிசி., மையத்துக்கு பேருந்துகளில் வந்தனர். பேருந்திலிருந்து இறங்குவதற்கு முன், கமாண்டோ ராஜசேகர், தன் கைத்துப்பாக்கியை சுத்தம் செய்தார்.

அப்போது, தவறுதலாக துப்பாக்கியின் விசையில் கை பட்டு தோட்டா வெடித்தது. சீறிய தோட்டா அருகிலிருந்த, கமாண்டோ மகாதேவசாமி, என்பவரின் தொடை பகுதியில் தோட்டா புகுந்து, வெளியேறியது.
அத்துடன், மகாதேவசாமியின் பின்னால் அமர்ந்திருந்த பெண் எஸ்.ஐ., மஞ்சுளாவையும் தோட்டா துளைத்தது. இதில் மகாதேவசாமி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த மஞ்சுளா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உள் அமைப்பு பாதுகாப்பு பிரிவு, ஏ.டி.ஜி.பி., அமர்குமார் பாண்டே கூறுகையில், ''பொதுவாகவே பயிற்சி முடிந்து, சி.சி.டி., மையத்துக்குள் நுழையும், சி.டி.சி., மற்றும் கே.எஸ்.ஆர்.பி., வீரர்கள், துப்பாக்கியிலுள்ள தோட்டாக்களை அகற்றி, உறுதி செய்த பின், துப்பாக்கிகளை ஒப்படைப்பது வழக்கம்.
துப்பாக்கியை சுத்தம் செய்த போது தான், எதிர்பாராத விதமாக இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது," என்றார்.
கமாண்டோ ராஜசேகர் மீது, கொலை குற்றமாக பதிவு செய்யாமல், கவனக்குறைவாக ஆயுதத்தை கையாண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications