காஷ்மீரில் தீவிரவாதிகள் நிகழ்த்திய திடீர் தாக்குல்.. சிஆர்பிஎப் வீரர் வீரமரணம்
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோப்பூர் நகரில் ரோந்து பணியில் இருந்து சிஆர்பிஎப் (Central Reserve Police Force) படை வீரர்களை குறிவைத்து தீவிராவதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு சிஆர்பிஎப் வீரர் வீர மரணம் அடைந்தார். இதில் அப்பாவி முதியவர் ஒருவரும் கொல்லப்பட்டார். அதில் இரண்டு சிஆர்பிஎப் வீரர்கள் பலத்த காயமடைந்துள்ளனர், ஒரு வீருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது.
வடக்கு காஷ்மீரில் உள்ள சோபூரில் உள்ள ரெபன் மாடல் டவுனில் இன்று காலை ரோந்து பணியில் இருந்த பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் திடீரென சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.. சி.ஆர்.பி.எஃப் (CRPF) இன் 183 வது படைப்பிரிவின் வீரர்களை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் உடனடியாக பதிலடி கொடுத்தனர். கடும் சண்டைக்கு பின்னர் தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சண்டையில் ஒரு சிஆர்பிஎப் வீரர் வீர மரணம் அடைந்துள்ளார். முதியவர் ஒருவரும் இறந்தார். அவருடன் இருந்த 3 வயது சிறுவனை தீவிரவாதிகள் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டனர். 3 வீரர்கள் காயம் அடைந்தனர்.
தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட முதியவர் முஸ்தபா காலனி எச்எம்டி நகரத்தில் வசிக்கும் பஷீர் அகமது என அடையாளம் காணப்பட்டுள்ளது. தப்பி ஓடிய தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
Recommended Video
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications