ஜார்கண்டிலும் ஒரு புராரி... ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை.. கிராம மக்கள் சோகம்!
ஜார்கண்டில் கடன் பிரச்சனையால் தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஞ்சி: ஜார்கண்டில் தீராத கடன் பிரச்சனையால் தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் டெல்லி புராரி பகுதியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மர்ம மரணமடைந்தனர். அவர்கள் சொர்க்கத்தை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

7 பேர் தற்கொலை
இந்நிலையில் ஜார்கண்டிலும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி 2 குழந்தைகள்
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தீபக் குமார் ஜா. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். அவர்களுடன் தீபக் குமாரின் பெற்றோர், மற்றும் சகோதரர் ரூபேஷ் ஜா ஆகியோர் வசித்து வந்தனர்.

கடன்காரர்கள் நச்சரிப்பு
தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தீபக், சொந்த தொழில் துவங்க வேண்டும் என முயற்சி செய்தார். ஆனால், பெரும் கடன்சுமை காரணமாக அது நடக்கவில்லை. கடன் கொடுத்தவர்களும் பணத்தை கேட்டு நச்சரிக்க தொடங்கினர்.

தற்கொலை முடிவு
போதுமான வருமானம் இல்லாததால் குடும்பத்தை நடத்தவே கஷ்டப்பட்ட தீபக் குமார், தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்தார். தனக்கு பிறகு கடன்காரர்கள் தனது குடும்பத்தை தொல்லை செய்வார்கள் என்று எண்ணிய் தீபக் குமார் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்.

7 பேர் தற்கொலை
இந்நிலையில் தீபக் தனது மனைவி, குழந்தைகள், சகோதரர், பெற்றோருடன் , அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தீபக், அவரது சகோதரர் ரூபேசும், மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

போலீஸ் விசாரணை
குடும்பத்தினர் படுக்கை அறையில் சடலமாக கிடந்தனர். அவர்களது உடலை கைப்பற்றிய போலீசார், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்கள் சோகம்
டெல்லி புராரி மரண அதிர்ச்சியே இன்னும் விலகாத நிலையில் ஜார்கண்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications