கொல்கத்தா பலாத்காரம்.. செஞ்சது ஒருவர் இல்லை 8 பேர்.. வங்க புரட்சியை கணித்து பிரபல ஜோசியர் ஷாக் தகவல்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: சமீபத்தில் வங்கதேச புரட்சியை துல்லியமாக கணித்து ஜோசியரான பிரஷாந்த் கினி கவனம் பெற்றார். ஜோசியரான பிரஷாந்த் கினி வங்கதேச புரட்சியை கணித்து உள்ளார். வங்கதேசத்தில் ஆட்சி கவிழும் என்று முன் கூட்டியே அவர் கணித்த நிலையில், அதன்படியே ஆட்சி கவிழ்ந்து உள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் அவர் செய்த போஸ்டில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பற்றிய எனது கணிப்புப்படி ஷேக் ஹசீனா மே ஜூன் ஜூலை ஆகஸ்ட் 2024 இல் கவனமாக இருக்க வேண்டும், அவர் படுகொலை முயற்சிகளை எதிர்கொள்ளக்கூடும். இதனால் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்படும் என்று கூறி இருந்தார். அவர் கூறியது போலவே தற்போது நடந்து உள்ளது.

kolkata

அதோடு தற்போது, வங்கதேச ராணுவம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஜனநாயகத்தை மீட்டெடுக்காது. இந்தியாவைச் சுற்றி டீப் ஸ்டேட் பொறி அமைத்து வருகிறது. அடுத்த சிக்கல் இந்தியாவிற்குத்தான். வரும் நாட்களில் இந்தியா கவனமாக இருக்கும். டீப் ஸ்டேட் ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் வெற்றி பெற்றுள்ளது. வங்கதேசத்தில் நடந்தது போல இந்தியாவிலும் உள்ளது.

அமெரிக்காவின் கைங்கரியமான டீப் ஸ்டேட் உலக நாடுகளில் பல இடங்களில் ஆட்சிகளை கவிழ்த்து வருகிறது. அதன் அடுத்த இலக்கு நேபாளம் மற்றும் இந்தியா. நேபாளம் மற்றும் இந்தியா முழுவதும் பங்களாதேஷ் மாணவர் போராட்டங்கள் போன்ற போராட்டங்கள் நடத்தப்படலாம். தற்போது மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் இந்த குழு உள்ளது. இவர்கள் இந்தியாவிற்கு எதிராக திரும்புவார்கள்.

kolkata

சிஐஏ, மொசாத், ஐஎஸ்ஐ இணைந்து வங்கதேசத்தை வீழ்த்தியதை நான் சரியாக கணித்தேன. அதன்படியே இப்போது இந்தியாவிற்கும் எச்சரிக்கை விடுக்கிறேன் என்று கூறி உள்ளார் ஜோசியர் பிரஷாந்த் கினி.

எச்சரிக்கை: இவர் தற்போது கொல்கத்தா பலாத்கார - கொலை குறித்தும் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

கொல்கத்தாவில் நடந்த பலாத்காரம் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் நடந்த நிர்பயா சம்பவத்திற்கு இணையாக மிகப்பெரிய கொடூரம் கொல்கத்தாவில் நடந்து உள்ளது. கொல்கத்தாவின் RG Kar மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. இந்த மருத்துவமனை தினமும் பல லட்சம் பேர் வரக்கூடிய மருத்துவமனை. இங்கே சர்வீஸ் சரியாக இருக்காது என்பதே பலரின் புகார். ஆனால் இலவச அரசு மருத்துவமனை என்பதால்.. இங்கே தினமும் பலர் வருவது வழக்கம்.

kolkata

எல்லா மருத்துவ கல்லூரி போலவே இங்கேயும் அதீத பணி நேரம் சுமை இருக்கும். அப்படிப்பட்ட நிலையில்தான் இரண்டாம் ஆண்டு முதுகலை பயிற்சி மருத்துவரான அந்த பெண் டாக்டர்.. அங்கே இரவு 2 மணி வரை வேலை பார்த்துள்ளார்.

அந்த 31 வயது பெண் தனது ஜூனியர்களுடன் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு, அதிகாலை 2 மணிக்கு சிறிது ஓய்வெடுக்க முடிவு செய்து உள்ளார். மருத்துவமனையில் ஓய்வு எடுக்க அறை இல்லாததால், செமினார் ஹாலில் ஓய்வெடுப்பது பாதுகாப்பானது என்று கருதி அங்கேயே சென்று தூங்கி உள்ளார்.

ஆகஸ்ட் 9 அன்று இந்த சம்பவம் எல்லாம் நடந்து உள்ளது. அன்று காலை வகுப்பிற்கு வந்தவர்கள்.. அந்த கருத்தரங்கில் அந்த பெண்ணின் உடல் அரை நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டது. நம்மிடம் தெரிவிக்கப்பட்ட தகவலில், அந்த பெண் கொலை செய்யப்படும் முன் கடுமையான பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். அவரின் பெண் உறுப்பில் 150 mg விந்தணு இருந்துள்ளது. இதன் அர்த்தம் இந்த சம்பவத்தை தனி ஆள் செய்திருக்க முடியாது.

இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 33 வயதான சஞ்சோய் ராய் என்ற நபரை கைது செய்துள்ளனர். இவர் அங்கே தன்னார்வலராக போலீஸார் உடன் இணைந்து செயல்பட்டு உள்ளார். இவர் வெறும் தன்னார்வலர்தான். ஆனால் போலீஸ் குழுக்களில் இருக்கிறார், அங்கே கிடைத்த காண்டாக்ட் மூலம் போலீஸ் கமிட்டி ஒன்றிலும் கூட கமிட்டி உறுப்பினராக இருக்கிறார்.

kolkata

கணிப்பு: சமீபத்தில் வங்கதேச புரட்சியை துல்லியமாக கணித்து ஜோசியரான பிரஷாந்த் கினி கவனம் பெற்றார். ஜோசியரான பிரஷாந்த் கினி வங்கதேச புரட்சியை கணித்து உள்ளார். இப்போது கொல்கத்தா பற்றி அவர் வெளியிட்டுள்ள கணிப்பில்,

கொல்கத்தா பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு பற்றி பலர் என்னிடம் கேட்கிறார்கள்.
எத்தனை பேர் சம்பந்தப்பட்டவர்கள் என்று கேட்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை 8 பேர் சம்பந்தப்பட்டவர்கள் !!!!! குற்றவாளிகள் போராட்டக்காரர்கள் போல் மாறுவேடமிட்டு தாங்கள் செய்த குற்றத்தை எதிர்த்து போராட்டம் நடத்துகிறார்கள் !!!???.. அவர்கள் நாடகம் ஆடுகிறார்கள், என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+