கழிவறையில் அடித்துக்கொண்ட மாணவர்கள்.. ஒருவர் உயிரிழப்பு.. 3 பேர் கைது!
டெல்லியில் பள்ளி மாணவர்கள் சண்டை போட்டுக்கொண்ட சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: பள்ளி கழிவறையில் மாணவர்கள் சண்டை போட்டுக்கொண்ட சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடமாநிலங்களில் பள்ளி மாணவர்கள் கொலை செய்யப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. அண்மையில் ஹரியானா மாநிலம் குருகிராமில் ஏழு வயது பள்ளி மாணவன் கொடூராமாக கொலை செய்யப்பட்டான்.
இதைத்தொடர்ந்து பள்ளிகள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டன. அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

மாணவர் மர்ம மரணம்
இந்நிலையில் தலைநகர் டெல்லியில் உள்ள ஒரு பள்ளியில் 14 வயது மாணவர் மர்மமான முறையில் உயிரிழ்ந்துள்ளார். டெல்லியின் கஜூரி காஸ் நகரில் உள்ள ஜீவன் ஜோதி பள்ளிக்கூடத்தில் 14 வயதுடைய மாணவர் நேற்று பள்ளிக்கூட கழிவறையில் மயங்கிய நிலையில் கிடந்தார்.

உயிரிழந்த மாணவன்
இதனையடுத்து அச்சிறுவனை உடனடியாக மீட்டு ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

கழிவறையில் நடந்த சண்டை
இதுதொடர்பாக பெற்றோர்களின் புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது உயிரிழந்த மாணவன் உட்பட 5 மாணவர்கள் கழிவறையில் சண்டை போட்டுக் கொண்டது கழிவறையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

3 பேர் கைது
இதனையடுத்து 304ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்ததை 302ன் கீழ் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications