தியேட்டருக்கு கூட்டிச் சென்று வன்புணர்வு.. நண்பர்களே கயவர்களாக மாறிய கொடூரம்!
உத்தர பிரதேசத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில் சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
Recommended Video

மீரட்: உத்தர பிரதேசத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில் சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு இருக்கிறார். மீரட் நகரத்தில் இருக்கும் தியேட்டரில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது.
பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட அந்த சிறுமிக்கு 16 வயது கூட நிரம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த சிறுமியின் நண்பர்களே இந்த கொடூரமான செயலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த செயலை செய்வதற்காக அந்த சிறுமியின் நண்பர்கள் பல நாட்களாக திட்டமிட்டு இருக்கிறார்கள்.

தியேட்டருக்கு சென்றனர்
டெல்லியின் மீரட் நகரத்தில் வசிக்கும் அந்த 16 வயது சிறுமி தனது நண்பர் ஒருவருடன் அங்கு இருக்கும் தியேட்டர் ஒன்றிற்கு சென்று இருக்கிறார். படம் பார்பபதற்கு முன்பு அவர்கள் கடைகளுக்கு சென்று ஷாப்பிங் செய்து இருக்கிறார்கள். மேலும் காலை உணவு சாப்பிட செல்லும் போது அந்த பையனின் நண்பன் ஒருவனும் அவர்களுடன் இணைந்து இருக்கிறான். இவர்கள் மூவருமாக சென்று பின் படம் பார்க்க முடிவு செய்துள்ளனர்.

வன்புணர்வு
தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டு இருந்த போது அந்த சிறுமியை இருவரும் திடீர் என்று வெளியே அழைத்து சென்றுள்ளனர். இந்த நிலையில் தியேட்டர் மாடியில் அந்த பெண்ணை அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும் இருவரும் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இதையடுத்து அந்த பெண் அதே இடத்தில் மயங்கி விழுந்து இருக்கிறார். பின் அந்த சிறுமி மயக்கம் தெளியும் வரை அவர்கள் அங்கேயே காத்து இருந்துள்ளனர்.

தெரியாத இடம்
அந்த சிறுமிக்கு மயக்கம் தெளிந்த உடன் பைக்கில் வைத்து அந்த இருவரும் அழைத்து சென்றுள்ளனர். அந்த சிறுமியை உத்தர பிரதேசத்தின் தெரியாத இடம் ஒன்றில் இறக்கிவிட்டுவிட்டு சென்றுள்ளனர். இதனால் அந்த பெண் வீட்டிற்கு எப்படி செல்வது என தெரியாமல் அந்த நாள் முழுக்க கஷ்டப்பட்டு இருக்கிறார். பின் மீண்டும் அந்த சிறுமி மீரட் நகரத்திற்கு கஷ்டப்பட்டு வந்துள்ளார்.

விசாரணை
இந்த தகவல் தெரிந்த அந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து இரண்டு பேர் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். மேலும் அந்த இரண்டு பேரும் இதற்காக கடந்த மூன்று மாதங்களாக திட்டமிட்டு வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications