மதுவை ஊற்றிக்கொடுத்து சகமாணவி பலாத்காரம்.. வீடியோ எடுத்து மிரட்டி ஓராண்டாக சித்ரவதை செய்த மாணவர்கள்
ஆந்திராவில் மதுவை ஊற்றிக்கொடுத்து சக மாணவியை பலாத்காரம் செய்து மாணவர்கள் வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

ஹைதராபாத்: ஆந்திராவில் மதுவை ஊற்றிக்கொடுத்து சக மாணவியை பலாத்காரம் செய்து மாணவர்கள் வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் அகிரிபள்ளியில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்த மாணவி சகமாணவர்களால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உடன் படிக்கும் மாணவருக்கு பிறந்த நாள் என கூறி ஹோட்டலில் பார்ட்டி கொடுத்துள்ளார். இந்த பார்ட்டியில் அந்த மாணவியும் பங்கேற்றுள்ளார்.

மதுவுடன் பிறந்தநாள் பார்ட்டி
நேரம் செல்ல செல்ல மதுவுடன் ஆட்டம் பாட்டம் என கலைகட்டியது பார்ட்டி. அப்போது மாணவியையும் சக மாணவர்கள் மதுக்குடிக்க தூண்டியுள்ளனர். மாணவி மறுத்த போதும் வற்புறுத்தி மதுவை ஊற்றிக்கொடுத்துள்ளனர்.

மாறி மாறி வீடியோ
மதுபோதை தலைக்கேறிய நிலையில் வகுப்பு நண்பர்களான சிவா ரெட்டியும், கிருஷ்ண வம்சியும் போதையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இருவரும் மாணவியை பலாத்காரம் செய்ததை மாறி மாறி வீடியோ எடுத்துள்ளனர்.

மற்றொரு மாணவன்
வீடியோவை வைத்து மிரட்டியே அந்த மாணவியை பலமுறை அவர்கள் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு படிப்பு முடிந்த நிலையில் தன்னுடன் படித்த மற்றொரு மாணவனான பிரவீன் அந்த மாணவியை தொடர்பு கொண்டு பலாத்கார வீடியோ தன்னிடம் உள்ளதாக கூறியுள்ளார்.

ஆசைக்கு இணங்க வேண்டும்
மேலும் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டாம் என்றால் தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை கேட்டு நிலைகுலைந்தார் அந்த மாணவி.

போலீஸில் புகார்
இதனால் கடந்த 2 மாதமாக கவலையுடன் இருந்த மாணவியை பெற்றோர் விசாரித்ததில் நடந்ததை கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோருடன் சென்று போலீஸில் அவர் புகார் அளித்தார். இதனடிப்படையில் பிரவீனை கைது செய்த போலீசார், மற்ற 2 மாணவர்களையும் தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications