சப்-கலெக்டரை காதலித்து திருமணம் செய்யும் எம்.எல்.ஏ! கேரளா முழுக்க இப்போ இதுதான் பேச்சு

அரசியல்வாதியும், அதிகாரியும் திருமணம் செய்துகொள்வது மிகவும் அரிதானது என்பதால் கேரளாவில் தற்போது இந்த திருமணம் குறித்துதான் மக்கள், விவாதித்து வருகிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் எம்எல்ஏ ஒருவர் சப்-கலெக்டரை காதலித்து மணமுடிக்க உள்ள தகவல் காட்டுத் தீ போல பரவி பரபரப்பாகக பேசப்பட்டு வருகிறது.

கேரள மாநில காங்கிரஸ் எம்எல்ஏ கே.எஸ்.சபரிநாதன். அருவிக்கரா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்்கப்பட்டுள்ளார். இவர் சப்-கலெக்டர் திவ்யா ஐயரை மணமுடிக்க உள்ள தகவலை பேஸ்புக் வாயிலாக அறிவித்துள்ளார்.

திவ்யா, டாக்டருக்கு படித்து சப்-கலெக்டராக வேலை பார்க்கிறார். சபரிநாதனுக்கு 33 வயதாகும் நிலையில், திவ்யா ஒரு வயதில் அவரை விட இளையவர்.

இங்கன ஆயிப்போச்சல்லோ

இங்கன ஆயிப்போச்சல்லோ

அரசியல்வாதியும், அதிகாரியும் திருமணம் செய்துகொள்வது மிகவும் அரிதானது என்பதால் கேரளாவில் தற்போது இந்த திருமணம் குறித்துதான் மக்கள், சாயா கடைகளில் சாவகாசமாக உட்கார்ந்து விவாதித்து வருகிறார்கள்.

படமே எடுத்துட்டாங்களாம்

படமே எடுத்துட்டாங்களாம்

சபரிநாதனின் தந்தை காங்கிரஸ் கட்சியின் சீனியர் நிர்வாகிகளில் ஒருவர். அந்த காலத்திலேயே கல்லூரி பேராசிரியை காதலித்து வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டவர். இவர்களது காதல் கதை, மலையாளத்தில் திரைப்படமாகவே வெளியாகியுள்ளது. மம்முட்டி அதில் ஹீரோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதை போல சபரிநாதனும் காதலித்தே திருமணம் செய்ய உள்ளார்.

அடுத்த மாதமே கல்யாணம்

அடுத்த மாதமே கல்யாணம்

இருவரது திருமணத்திற்கும் இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளதால், ஜூன் மாதம் கெட்டி மேளம்/சண்டை மேளம் முழங்க உள்ளது. தந்தையை போல ஓடிப்போய் திருமணம் செய்ய வேண்டிய நிர்பந்தம் நல்லவேளையாக சபரிநாதனுக்கு ஏற்படவில்லை.

கண்டோம், காதல் கொண்டோம்

கண்டோம், காதல் கொண்டோம்

சபரிநாதன் தனது பேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து கூறுகையில், நான் திவ்யா ஐயரை திருவனந்தபுரத்தில் சந்தித்தேன். நான் நெருக்கமானோம். எங்கள் நோக்கம், எண்ணம் அனைத்தும் ஒரே அலைவரிசை கொண்டதாக இருந்தது. இரு குடும்பத்தார் ஆசியோடு திவ்யாவை விரைவில் வாழ்க்கை துணையாக்க உள்ளேன். உங்களின் ஆசியும் எங்களுக்கு தேவை என்று கூறியுள்ளார். அப்புறமென்ன, "துடக்கம் மாங்கல்யம், தன்துநானேனா" என்று பாடியபடி மணமக்களை வாழ்த்துவோம் வாருங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+