Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜஸ்தானில் நடுராத்திரியில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.2ஆக பதிவு.. அச்சத்தில் பொதுமக்கள்!

Subscribe to Oneindia Tamil

பிகானெர்: ராஜஸ்தான் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் இரவு 2.16 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உணரப்பட்ட நிலநடுக்கும் ரிக்டர் அளவுக்கோலில் 4.2 ஆகவும், அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 3.5ஆகவும் பதிவாகியுள்ளது.

அண்மைக் காலமாக இந்தியாவின் வடமாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. குறிப்பாக டெல்லி, ஹரியானா, உத்தரப் பிரதேசம், காஷ்மீர், பஞ்சாப் உள்பட பல மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

A magnitude 4.2 earthquake hit Rajasthan and Arunachal Pradesh at 2:16 am on Sunday

குறிப்பாக தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் நடு இரவில் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதன் வீடியோக்களும் சமூக வலைதலங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

டெல்லி உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதற்கான காரணமாக ஆப்கானிஸ்தானாக இருக்கலாம் என கூறப்பட்டது. ஆப்கானிஸ்தான் நாட்டின் இந்துகுஷ் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.5 என்ற அளவில் பதிவான நிலையில், அதன் தாக்கம் தான் இந்தியா உள்பட பல நாடுகளில் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் தற்போது அருணாச்சல பிரதேசத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அம்மாநிலத்தின் சங்லாங் பகுதியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகி இருந்தது. அதேபோல் ராஜஸ்தான் மாநிலத்திலும் இரவு நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பிகானெர் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தை பொதுமக்கள் உணர்ந்ததால் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகாலை 2.16 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுத்தால் எந்தவித பாதிப்பும், சேதமும் நிகழவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+