சீனாவில் கடுமையான நிலநடுக்கம்.. கட்டிடங்கள் குலுங்கின.. ரிக்டர் அளவுகோலில் 7ஆக பதிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

பீஜிங்: தென் மேற்கு சீனாவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் கட்டிடங்கள் ஆடின, மக்கள் தெருக்களுக்கு ஓடி தஞ்சம் அடைந்துள்ளனர்.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று மாலை கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. குன்கையுவான் நகரை மையமாக வைத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

A magnitude 7 earthquake has struck central China Sichuan

ரிக்டர் அளவுகோலில் 7 என்ற அளவுக்கு இந்த நிலநடுக்கம் கடுமையானதாக இருந்ததால், கட்டிடங்கள் ஆட்டம் கண்டன. கண்ணாடிகள் உடைந்து விழுந்தன. வீட்டிலிருந்த பொருட்கள் கீழ விழுந்து நொறுங்கியுள்ளன.

இடிபாடுகளில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா என்ற தகவல் உடனடியாக தெரியவில்லை. மீட்பு படையினர் சம்பவ இடங்களுக்கு விரைந்துள்ளனர். சிச்சுவான் மாகாணத்தில் கடந்த 2008ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தின்போது சுமார் 70000 பேர் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A magnitude 7 earthquake has struck central China, the US Geological Survey reports. A quake in Sichuan in May 2008 killed almost 70,000 people.
Please Wait while comments are loading...