Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கல்யாணத்தில் நடனம் ஆடியதால் பிரச்சனை.. மேற்கு வங்கத்தில் மனைவியை கொன்ற கணவன்

கல்யாண நிகழ்வில் நடனம் ஆடியதால் மேற்கு வங்கத்தில் கொலை சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    திருமணத்தில் நடனமாடியதால் மனைவியை கொலை செய்த கணவன்

    கொல்கத்தா: கல்யாண நிகழ்வில் நடனம் ஆடியதால் மேற்கு வங்கத்தில் கொலை சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இதனால் சப்னா என்ற பெண்ணை அவரது கணவன் சுபீர் என்பவர் கொலை செய்து இருக்கிறார்.

    இவர்கள் இருவருக்கு திருமணம் நடந்து சில மாதங்களே ஆகிறது. ஏற்கனவே இந்த பெண்ணை சுபீர் பல முறை கொடுமைபடுத்தி இருக்கிறார்.

    சுபீரும், அவரது அம்மாவும் இந்த மரணத்தில் தொடர்புடையவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கொலையை இவர்கள் தற்கொலை போல சித்தரிக்க முயன்றதும் அம்பலம் ஆகியுள்ளது.

    கல்யாணம்

    கல்யாணம்

    பல நாள் பிரச்சனைக்கு இடையில்தான் இந்த தம்பதி அதே பகுதியில் நடந்த உறவினர்கள் திருமணம் ஒன்றிற்கு சென்று இருக்கிறார்கள். அந்த திருமணம் சுபீரின் உறவினர்கள் திருமணம் என்று கூறப்படுகிறது. அங்குதான் சப்னா நடனம் ஆடியுள்ளார்.

    தாக்கினார்

    தாக்கினார்

    சப்னா நடனம் ஆடும் போதே அவரது கணவன் வந்து தடுத்துள்ளார். எல்லோருக்கும் முன்பு ஆடுவது தவறு என்று திட்டி இருக்கிறார். ஆனால் வட இந்திய திருமணங்களில் பெண்கள் நடனம் ஆடுவது மிகவும் இயல்பான ஒன்றாகும்.

    அடித்தார்

    அடித்தார்

    இதனால் அவர்கள் இருவருக்கு இடையில் சண்டை வந்து இருக்கிறார். அதே இடத்தில் வைத்து எல்லோருக்கும் முன்னிலையில் அந்த பெண்ணை சாப்பிடும் தட்டால் அடித்துள்ளார். இதில் அவர் முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது.

    மரணம்

    மரணம்

    இந்த நிலையில் நேற்று இரவோடு இரவாக அந்த பெண்ணை சுபீர் கொலை செய்துள்ளார். இந்த கொலைக்கு சுபீரின் தாயும் உடந்தையாக இருந்துள்ளார். கழுத்தை இறுக்கி கொன்றுவிட்டு பின் தற்கொலை என்று நாடகம் ஆடியதும் அம்பலமாகியுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+