திருமணம் முடிந்த காதலியை பலாத்காரம் செய்ய முயன்ற முன்னாள் காதலன்.. நாக்கை வெட்டி கிடாசிய காதலி
திருமணம் முடிந்த பிறகும் பாலியல் தொல்லை கொடுத்துவந்த முன்னாள் காதலனின் நாக்கை பெண் ஒருவர் வெட்டி கிடாசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

லக்னோ: திருமணம் முடிந்த பிறகும் பாலியல் தொல்லை கொடுத்துவந்த முன்னாள் காதலனின் நாக்கை பெண் ஒருவர் வெட்டி கிடாசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரு பெண்னை காதலித்து வந்தார். இந்த நிலையில் அவரது காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் முடிந்தது.
அந்த பெண் தனது கணவருடன் பைசாபாத் இனாயாத் நகரில் வசித்து வந்தார். அங்கு சென்று தனது முன்னாள் காதலியுடன் வாலிபர் சண்டை போட்டு உள்ளார்.

பலாத்காரம் செய்ய முயற்சி
மேலும் திருமணம் ஆன தனது முன்னாள் காதலியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், முன்னாள் காதலனுக்கு தக்க பாடம் கற்பிக்க முயன்றார்.

நாக்கை துண்டித்தார்
இந்நிலையில் அந்த பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் மீண்டும் வீட்டிற்கு வந்து தகராறு செய்தார் முன்னாள் காதலன். இதனை பொறுக்க முடியாமல் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அந்த பெண் முன்னாள் காதலனின் நாக்கை துண்டித்து விட்டார்.

தப்பியோடிய இளைஞர்
வெட்டுப்பட்ட நாக்கு கீழே கிடந்து உள்ளது. ஆனால் காதலன் ஓடி விட்டான். இந்த சம்பவம் குறித்து அறிந்த பாதிக்கபட்டவரின் தாயார் முன்னாள் காதலியின் வீட்டுக்கு சென்று சண்டைபோட்டு உள்ளார்.

பலாத்காரம் செய்ய முயன்றதால்
பின்னர் வெட்டுபட்ட நாக்கை எடுத்து கொண்டு போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்து உள்ளார். முன்னாள் காதலி போலீசில் தனது முன்னாள் காதலன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் அதனால் தான் அவரது நாக்கை வெட்டியதாகவும் கூறினார்.

பெரும் அதிர்ச்சி
நாக்கு வெட்டப்பட்ட இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications