பக்கத்து வீட்டுக்காரருடன் காதல்.. மணமான பெண்ணை கல்யாண ஆசைகாட்டி பாலியல் உறவு வைக்கலாமா? ஹைகோர்ட் நச்
போபால்: பக்கத்து வீட்டு நபருடன் தகாத உறவு கொண்டிருந்த பெண், திடீரென போலீசுக்கு ஓடினார்.. சம்பந்தப்பட்ட நபர் மீது புகார் தந்ததையடுத்து, இந்த விவகாரம் மத்திய பிரதேசம் உயர்நீதிமன்றத்திலும் விசாரிக்கப்பட்டது. இறுதியில் நீதிபதி தந்த தீர்ப்பை பாருங்க.
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகில் உள்ளது சதர்பூர்.. இங்கு வசித்து வரும் வீரேந்திர யாதவ் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் பழகி வந்தார்.. அந்த பெண் ஏற்கனவே திருமணமானவர்.. எனினும், இவர்கள் இருவரும் தனிமையில் எல்லைமீறி பழகி வந்தனர்..

பெண்ணின் பரபரப்பு புகார்
திடீரென ஒருநாள் அந்த பெண், வீரேந்திரா மீது போலீஸில் புகார் செய்தார்.. அந்த புகாரில், "தன்னுடைய கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் வீரேந்திரா அடிக்கடி வீட்டிற்கு வருவார்... அப்போது நாங்கள் இருவரும் உறவு வைத்துக்கொள்வோம்.. வீரேந்திராவுக்கும் திருமணமாகிவிட்டது. ஆனாலும் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டு என்னைத் திருமணம் செய்து கொள்வதாக கூறினார். கடைசியில் திருமணம் செய்யாமல் என்னை ஏமாற்றிவிட்டார்" என்று புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
போலீசாரும் இந்த புகாரின்பேரில், வீரேந்திரா மீது போலீஸார் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்திருந்தனர்.. இதையடுத்து, வீரேந்திரா ஹைகோர்ட்டுக்கு சென்று மனு தாக்கல் செய்தார்.. அந்த மனுவானது, நீதிபதி மணிந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
பாலியல் வன்கொடுமை புகார்
அப்போது வீரேந்திரா தரப்பில் ஆஜரான ஸ்ரேயாஸ் பண்டிட், "பெண் கொடுத்துள்ள பாலியல் வன்கொடுமை புகார் செல்லுபடியாகாது. அந்த பெண் ஏற்கனவே திருமணம் ஆனவர். அவர் விருப்பப்பட்டுத்தான் மனுதாரருடன் உறவு வைத்துக்கொண்டார். அந்த பெண் கொடுத்துள்ள சம்மதத்தை தவறாகப் புரிந்துக்கொண்டு பெறப்பட்டதாகக் கருத முடியாது. இந்த உறவின் தன்மை குறித்து அந்த பெண் நன்றாகவே அறிவார்'' என்று வாதிட்டார்.
அத்துடன், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மேற்கோள்காட்டி திருமணமான பெண் பொய்யான வாக்குறுதி அளித்து உடலுறவுக்கு ஒப்புதல் பெறப்பட்டதாக கூற முடியாது என்பதையும், வீரேந்திராவின் வழக்கறிஞர், வாதிட்டார்.
ஒப்புதல் வாக்குமூலம் தந்த பெண்
இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, "புகார் கொடுத்திருக்கும் பெண்ணே மனுதாரரான வீரேந்திராவுடன் 3 மாதங்களாக உறவிலிருந்ததாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். என் கணவர் இல்லாத போதெல்லாம் இளைஞர் என்னுடைய வீட்டிற்கு வருவார் என்றும் கூறியிருக்கிறார்..
புகார்தாரர் வற்புறுத்தப்பட்டதாகவோ அல்லது கட்டாயப்படுத்தப்பட்டதாகவோ எந்தக் குற்றச்சாட்டும் கூறவில்லை. அதோடு அந்த பெண் பொய்யான வாக்குறுதியின் அடிப்படையில் உறவு வைத்துக்கொண்டதற்கான எந்தவித அறிகுறியும் தென்படவில்லை" என்று கூறி வீரேந்திரா மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் இளைஞரையும் விடுவிக்க உத்தரவிட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications