அதிகாலையில் குலுங்கிய வீடுகள்.. ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!.. மக்கள் அச்சம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை ஏற்பட்ட லேசான நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர். அதிகாலை 4.33 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.
சமீபத்தில் சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி சுமார் 150 பேர் வரை உயிரிழந்த நிலையில், தற்போது இந்த நிலநடுக்கம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஜிஷிஷன் மாவட்டத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.2 அலகுகளாகப் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் அருகிலுள்ள மக்கள் நெருக்கம் மிகுந்த கின்காய் மாகாணமும் குலுங்கியது. இதில் கட்டடங்கள் இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 150ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை கூறினர். மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கான்சு மாகாணத்தில் மட்டும் 117 போ் உயிரிழந்தனர். கின்காய் மாகாணத்தில் 31 போ் இறந்தனர்.
இந்நிலையில் சீனாவின் எல்லையையொட்டி அமைந்திருக்கும் ஜம்மு காஷ்மீரின் லே பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.5 என பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக மக்கள் பீதியடைந்துள்ளனர். தற்போது ஜம்மு காஷ்மீரில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில், நிலநடுக்கம் தீவிரமாக பதிவாகியிருந்தால் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும் என உள்ளூர் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications