அடக் கொடுமையே.. வெறும் 14 வயசு தான்! கழிவறைக்குள் கேட்ட ‘குவா குவா’..! பதறி போன போபால்..!
போபால் : மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே வீட்டின் கழிவறையில் 14 வயது சிறுமி ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த காதலன் சிறையில் இருப்பது தெரிய வந்துள்ளது.
ஏன் இந்த உலகம் இப்படி ஆயிருச்சு! இப்படி இருந்தா எப்படி மழை பெய்யும்? என பல பெரியவர்கள் தலையில் அடித்துக்கொண்டே பல சம்பவங்களை கேள்விப்பட்டு கடந்து செல்வதை நாம் பார்த்திருப்போம்.. அந்த அளவுக்கு நாட்டில் குற்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.
பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், போதைக்கு அடிமையாகும் சிறுவர்கள், 15 வயதுக்குள் குழந்தை பெற்றுக் கொள்ளும் சிறுமிகள் என குற்ற சம்பவங்களில் வடிவம் வேறு இருந்தாலும் சமூகத்தில் ஏற்படுத்தும் பாதிப்பு ஒன்றுதான்.

மபியில் அதிர்ச்சி
மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே மைனர் காதலனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 14 வயது சிறுமி தனது மூத்த சகோதரியின் வீட்டில் கழிவறையில் குழந்தை பெற்றுள்ள சம்பவம் தான் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு, பாதிக்கப்பட்ட பெண்ணும், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனும் TT நகர் பகுதியில் உள்ள சந்தித்துள்ளனர்.

பாலியல் பலாத்காரம்
முதல் சந்திப்பிலேயே அவர்கள் இருவரும் நண்பர்களாகி, அவர்களின் நட்பு பாலியல் உறவாக மாறியுள்ளது. இதனையடுத்து அந்த பையன் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்து செல்வதோடும் பெற்றோர் இல்லாத நேரங்களில் பாலியல் உறவில் ஈடுபட்டதால், அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார். சிறுமி கர்ப்பமானதை அறிந்த குடும்பத்தினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து TT நகர் காவல் நிலையம் பலாத்கார வழக்கைப் பதிவுசெய்த இளைஞனை போலீசார் கைது செய்து சிறார் நீதி வாரியத்தில் ஆஜர்படுத்தினர்.

சிறுவன் கைது
சிறுமி சம்மதத்தின் பேரிலேயே உறவு நடந்திருந்தாலும் கூட 18 வயதுக்குட்பட்ட பெண்ணுடன் உடலுறவு கொள்வது சட்டத்தின்படி கற்பழிப்பாகக் கருதப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், சிறுமியை பராமரிக்க யாரும் இல்லை என்றும் உறவினர்கள் கூறியதால், சிறுமி அவரது சகோதரியின் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

கழிவறையில் பிரசவம்
இந்நிலையில் சகோதரியின் வீட்டில் வசித்து வந்த சிறுமி கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் கர்ப்பத்தை கலைக்க மறுத்த நிலையில் அவரது சகோதரி வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று இரவு சிறுமி கழிப்பறைக்குச் சென்றபோது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. மேலும் கழிவறையிலேயே அவர் குழந்தையை பெற்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார் மற்றும் சைல்டு லைன் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications