செல்லாத ரூ500 நோட்டை வாங்க மறுத்த தகராறில் சிறுமி பலாத்காரம்... உ.பி.யில் படுபயங்கரம்!
பழைய 500 ரூபாய் நோட்டு பஞ்சாயத்தில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார்.
பரேய்லி: செல்லாத ரூ500 நோட்டை தந்தை வாங்க மறுத்து தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த கும்பல் அவரது 15 வயது மகளை பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
ரூபாய் நோட்டுகள் செல்லாது விவகாரத்தில் உயிர் பலிகள் தொடர் கதையாகி வருகின்றன. பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய நோட்டுகளை வாங்க வங்கிகள், ஏடிஎம்களுக்கு சென்ற 75 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

பழைய ரூபாய் நோட்டு...
அத்துடன் மட்டுமின்றி சமூகத்தில் பல்வேறு மோசமான விளைவுகளையும் இந்த ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பு விவகாரம் உருவாக்கியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பரேய்லியில் வரட்டிகளை விற்பனை செய்து வரும் வியாபாரியிடம் 3 பேர் கொண்ட கும்பல் வியாபாரம் பேசியுள்ளது. அப்போது பழைய 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து வரட்டிகளைக் கேட்டிருக்கிறது.

தகராறு..
ஆனால் பழைய 500 ரூபாய் நோட்டுகளை அவர் வாங்க மறுத்துவிட்டார். இதில் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இளம்பெண் பலாத்காரம்
அதில் ஆத்திரமடைந்த 3 பேர் கொண்ட கும்பல் வரட்டி விற்பனையாளரின் வீட்டுக்கு சென்றுள்ளது. அங்கு தனியாக இருந்த அவரது 15 வயது மகளை கடத்திச் சென்று பலாத்காரம் செய்திருக்கிறது.

9-ம் வகுப்பு மாணவர்
இந்த பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரில் ஒருவர் 9-ம் வகுப்பு மாணவர். இது தொடர்பாக வரட்டி விற்பனையாளர் போலீசில் புகார் செய்துள்ளார். தப்பி ஓடிய 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ரூ500 நோட்டு விவகாரம் ஏற்படுத்தியுள்ள மிக மோசமான இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications