ஒடிசாவில் 16 நாள் குழந்தையை தூக்கி சென்ற குரங்கு.. தேடுதல் வேட்டையில் தனிப்படை!
ஒடிசாவில் கட்டாக் மாவட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 16 நாள் குழந்தை குரங்கு ஒன்றால் தூக்கி செல்லப்பட்டு இருக்கிறது.
புபனேஷ்வர்: ஒடிசாவில் கட்டாக் மாவட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 16 நாள் குழந்தை குரங்கு ஒன்றால் தூக்கி செல்லப்பட்டு இருக்கிறது. இந்த குழந்தையை மீட்க தற்போது தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் கட்டாக் மாவட்டத்தில் உள்ள தாளபஸ்தா என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. வீட்டில் அம்மாவுடன் தூங்கிக் கொண்டு இருந்த குழந்தையை வீட்டில் புகுந்த குரங்கு ஒன்று காட்டிற்குள் தூக்கி சென்றுள்ளது.

அந்த குழந்தை பிறந்து 16 நாட்களே ஆகியுள்ளது. தற்போது அங்கு தீயணைப்பு படையினரும், வனத்துறை அதிகாரிகளும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மொத்தம் 30 பேர் கொண்ட தனிப்படை இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது. அந்த குழந்தையின் அழுகையை வைத்து இந்த தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
அந்த காடு மிகவும் அடர்த்தியான பகுதி என்பதால் தேடுதல் வேட்டையில் சுணக்கம் ஏற்பட்டு உள்ளது. அந்த மாவட்டத்தில் ஏற்கனவே நிறைய குழந்தைகள் குரங்குகள் மூலம் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications