டெல்லியில் பரபரப்பு.. உச்சநீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை!
உச்சநீதிமன்ற வளாகத்தில் தலைமைக் போலீஸ் காவலர் சந்த்பால் என்பவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். பணியில் இருந்த போது அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
டெல்லி : உச்சநீதிமன்ற வளாகத்தில் தலைமைக் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சந்த் பால் என்ற டெல்லி போலீஸ் தலைமை காவலர் உச்சநீதிமன்றத்தில் பாதுகாவலராக பணிபுரிந்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் நீதிமன்றத்தின் ஜி-கேட் பகுதியில் அவர் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது தான் வைத்திருந்த ரைஃபிளை எடுத்த அவர் திடீரென தன்னைத் தானே சுட்டுக்கொண்டார். இதில் சந்த் பால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சொந்தப் பிரச்சனையில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். உச்சநீதிமன்ற வளாகத்தில் தலைமைக் காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications