கேரள சர்ச்சில் மகாதேவன் யானைக்கு ஆசிர்வாதம்...ஏன் தெரியுமா?
கேரள சர்ச்சில் இளம் பாதிரியார் ஒருவர் மகாதேவன் என்ற 20 வயது யானைக்கு ஆசிர்வாதம் அளித்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது.
திருவனந்தபுரம் : கோட்டயம் அருகேயுள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் 20 வயது யானைக்கு ஆசிர்வாதம் அளிக்கப்பட்டுள்ளது, இதனையடுத்து அந்த யானையின் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் பரவியதால் சர்ச்சை வெடித்தது.
கிறிஸ்தவ மதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஞானஸ்தானம் எடுப்பது அவர்களது வழக்கத்தில் உள்ள ஒரு விஷயம். ஆனால் கோட்டயத்தில் நடந்த ஆசிர்வாதம் அளிக்கும் சம்பவம் அனைவரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது.
கோட்டயம் மாவட்டம், அருவிதாரா என்ற இடத்தில், கத்தோலிக்க சர்ச் உள்ளது. இங்கு கடந்த வியாழனன்று, 20 வயது யானைக்கு இளம் பாதிரியார் ஒருவர் ஆசிர்வாதம் அளித்துள்ளார்.

ஆச்சரியம் இல்லை
இது குறித்து அந்த சர்ச்சின் மூத்த பாதிரியாளர் தாமஸ் வெடிகுன்னெலிடம் கேட்ட போது, '' ஒரு யானைக்கு ஆசிர்வாதம் அளிக்கப்பட்டது. சர்ச்சை சேர்ந்த இளம் பாதிரியார் ஆசிர்வாதம் அளித்துள்ளார். இதில் என்ன அதிசயம் உள்ளது" . யானைக்கு ஞானஸ்தானம் அளிக்கப்படவில்லை, ஆசிர்வாதம் தான் அளிக்கப்பட்டது என அவர் விளக்கம் அளித்தார்.

செல்லப்பிராணி
கேரளாவை சேர்ந்த மூத்த அரசியல்வாதி பி.சி.ஜார்ஜ், அந்த சர்ச்சின் உறுப்பினராக உள்ளார். இது குறித்து அவர் கூறும்போது "எனது பழதோட்டத்தில், பல ஆண்டுகளாக, 50 யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

யானைக்கு ஆசிர்வாதம்
சர்ச்சில் ஆசிர்வாதம் பெற்ற யானை, என் உறவினருக்கு சொந்தமானது. அந்த யானையின் பெயர், மகாதேவன்; 20 வயது இருக்கும். சர்ச்சில் ஆசிர்வாதம் பெற்றதால், யானையின் பெயர் மாற்றப்படும் என கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

கவனத்தை ஈர்த்த சம்பவம்
எனினும் இதுவரை இல்லாத வகையில் சர்ச்சில் ஒரு யானைக்கு ஆசிர்வாதம் அளிக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கேரளாவில் யானைகளை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருபவர்கள் அவற்றை தங்களின் குடும்பத்தில் ஒரு நபராகவே கருதுகின்றனர் என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications