Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மணமகனுக்குத்தானே வரதட்சணை கொடுப்பாங்க! "இவங்களுக்குமா"? அது என்ன சூட்கேஸில்? மலைக்க வைத்த திருமணம்

Subscribe to Oneindia Tamil

மீரட்: உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் தடபுடலாக ஒரு திருமணம் நடந்துள்ளது. அதாவது பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டாருக்கு ரூ 2.56 கோடியை ரொக்கமாகவும் ரூ 75 லட்சம் மதிப்பில் காரும் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்த திருமண வைபவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

ஒரே ஒரு கையெழுத்தில் முடியும் திருமணம் தொடங்கி ஊரையே திரும்பி பார்க்க வைக்கும் திருமணங்கள் வரை அவரவர் வசதிக்கேற்ப, நம்பிக்கைக்கேற்ப பல வைபவங்களை பார்த்திருக்கிறோம்.

meerut marriage

அதில் இப்படியும் கல்யாணம் செய்யலாமா, இப்படியெல்லாம் கல்யாணம் செய்யலாமா என்ற இரு மாடுலேஷன்களில் வியந்துள்ளோம். அந்த வகையில் அம்பானி வீட்டு திருமணத்தை பார்த்து வாயடைத்து போயிருந்தோம்.

நிச்சயதார்த்தம், ப்ரீ வெட்டிங், வெட்டிங், ரிசப்ஷன் என 4 நிகழ்வுகளையும் அம்பானி குடும்பத்தினர் கோலாகலமாக செய்து முடித்தனர். அந்த வகையில் அண்மையில் நெல்லை ஆர்.எஸ். முருகன் இல்லத் திருமணம் களைகட்டியது.

தென்னை தொழிலதிபரான முருகனின் மூத்த மகன் விஜய் ராகுலுக்கும் ராமநாதபுரத்தை சேர்ந்த நடிகர் வேல ராமமூர்த்தியின் பேத்தி வைஷ்ணவிக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் மணமக்கள் அணிந்திருந்த அணிகலன்கள் மட்டும் தங்கம் அல்ல. அவர்கள் போட்டிருந்த மாலையும் தங்கத்தினால் ஆனது.

அது போல் மணப்பெண் தன் கூந்தலுக்கு அலங்காரம் செய்த பூக்களும் தங்கமாம். மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு, திருமணம் என கொண்டாட்டமாக இருந்தது. மணப்பெண்ணின் ரவிக்கையில் கூட தங்கம், வைரக்கற்கள் பதித்திருந்ததாக சொல்லப்படுகிறது.

meerut marriage

முருகனை போல் மணமகளின் பெற்றோரும் வசதி படைத்தவர்கள்தானாம். அவர்களாக பிரியப்பட்டு மணப்பெண்ணுக்கு 600 சவரன் நகை போட்டனராம். இதை வரதட்சணை என சொல்வது தன் மனதிற்கு கஷ்டமாக இருப்பதாகவும் பெண்ணுக்கு பெற்றோர் பிரியப்பட்டு கொடுப்பதை வரதட்சணை என்பதா என்றும் முருகன் ஒரு பேட்டியில் கூட கவலை தெரிவித்திருந்தார்.

இந்த திருமணத்தில் அம்பானி திருமணத்தில் பிரபலமடைந்த flower shawl மணப்பெண் அணிந்திருந்தார். அதுவும் பிரபலமடைந்தது. இதையெல்லாம் மிஞ்சும் வகையில் மீரட்டிலும் ஒரு திருமணம் நடந்துள்ளது. அதில் மணப்பெண் குடும்பத்தினர் மணமகனுக்கு ரூ 2.5 கோடியை ரொக்கமாக கொடுத்தனர்.

அது போல் அவருக்கு ரூ 75 லட்சத்தில் காரும் வாங்கிக் கொடுத்திருந்தனர். ஆம் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் நடந்த திருமணம் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. அது ஒரு முஸ்லீம் வீட்டு கல்யாணமாகும். மீரட் டூ டெல்லி டூ டேராடூன் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் இந்த திருமணம் நடந்தது.

இதுகுறித்து வைரலான வீடியோவில் வரதட்சணையாக மணமகனுக்கு மணப்பெண் வீட்டார், ரூ 2.56 கோடியை சூட்கேஸில் வைத்து கொடுத்தனர். அது போல் மணமகனின் தங்கைக்கும் ஜூடா சூபைய் என்ற சடங்கின் பெயரில் ரூ 11 லட்சம் ரொக்கம் கொடுக்கப்பட்டது.

meerut marriage

அது போல் திருமணத்தை நடத்தி வைத்தவருக்கு ரூ 8 லட்சம் வழங்கப்பட்டது. அது போல் உள்ளூர் மசூதிக்கு ரூ 8 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது. அது போல் கார் வாங்கவும் ரூ 75 லட்சத்தை சூட்கேஸில் வைத்து கொடுத்தனர்.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து நெட்டிசன்கள், இவர்களின் வீட்டிற்கு வருமான வரித் துறையும் அமலாக்கத் துறையும் ரெய்டு நடத்த வேண்டும் என்கிறார்கள். அது போல் திருமணத்திற்கு இவர்கள் செலவு செய்த தொகைக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி போட்டு ஏழை, எளிய மக்களுக்கு அன்றாட வாழ்வாதாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டும் என இன்னொரு நெட்டிசன் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+