பாம்புனா படம் எடுக்கும்.. பணம் கூடவா எடுக்கும்.. ஏடிஎம்முக்குள் புகுந்து கலங்கடித்த பா..பா.. பாம்பு!
காசியாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் பாம்பு ஒன்று நுழைந்து பணம் எடுக்கும் இயந்திரத்தில் உட்கார்ந்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Recommended Video
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அதை பார்த்தாலே 10 அடி தூரம் ஓடுவோம். காரணம் அதன் விஷத்தன்மை. கொத்தினால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.
இந்த நிலையில் கொரோனா நெருக்கடியில் ஏடிஎம்களுக்கு சென்று பணம் எடுப்பதே அதிகம். இதில் அந்த ஏடிஎம்மில் பாம்பு இருந்தால் என்ன செய்வது?

ஓட்டையில்
ஆம் காசியாபாத்தில் ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்மின் வெளிப்புறத்தில் உள்ள ஒரு ஓட்டை வழியாக அந்த பாம்பு உள்ளே நுழைந்தது. பின்னர் ஏடிஎம் இயந்திரத்தில் மானிடரின் மேல் இருந்த ஒரு ஓட்டையில் நுழைந்துவிட்டது.

வாடிக்கையாளர்கள்
இதை பார்த்த ஏடிஎம் வாடிக்கையாளர்கள் வீடியோவாக எடுத்து வைரலாக்கினர். அந்த வீடியோவில் அந்த பாம்பு உள்ளே சென்றுவிட்டது என வாடிக்கையாளர்கள் கூறுவதை கேட்க முடிந்தது. இதையடுத்து பாம்பு குறித்து வனத்துறையினரிடம் தெரிவிக்கப்பட்டது.

அச்சம்
அவர்கள் வந்து அந்த பாம்பை பிடித்து சென்றனர். அந்த பாம்பு விஷமற்றது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பாம்பு வீடியோ வைரலாகி வருகிறது. இதற்கு ஆயிரக்கணக்கில் கமென்ட்டுகள் கிடைத்துள்ளன. மிகவும் அச்சமேற்படுத்துகிறது என பெரும்பாலனோர் தெரிவித்துள்ளனர்.

குரங்கு
இன்னும் சிலரோ பாம்புன்னா படம்தான் எடுக்குமா, அதுவும் பணம் எடுக்க வந்திருக்கணும், அப்பாவி ஜீவனை பார்த்து இப்படியா பயப்படுவது என சிலர் கிண்டலடித்து வருகிறார்கள். டெல்லியில் ஒரு ஏடிஎம் மையத்தில் ஒரு குரங்கு உள்ளே நுழைந்து அந்த மெஷினை சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications