காஷ்மீர் எல்லைப் பகுதியில் பயங்கர துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரர் உட்பட 3 பேர் பலி
ஜம்மூ-காஷ்மீர் எல்லைப்பகுதியில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிராவதிகள் பாதுகாப்புப்படையினர் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
போண்டிபோரா மாவட்டத்தில் உள்ள மான்ஸ்போரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு நேற்றிரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினருடன் அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கிராமத்தை சுற்றிவளைத்து தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதனையறிந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இருதரப்புக்கும் இடையே விடிய விடிய நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப்படை அதிகாரி ஒருவர் படுகாயமடைந்தார்.
பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை ப்பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே பாரமுல்லா மாவட்டம் துஜ்ஜார் கிராமத்தில் வீடு ஒன்றில் பதுங்கியிருந்த தீவிரவாதி காவல்துறையினர் சுற்றி வளைத்ததால் சரணடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications