இவரும் ஒரு மகனா?... பெற்ற தாயை மாடியிலிருந்து கீழே வீசிக் கொன்ற கொடூரன்!
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தாயை கவனித்துக்கொள்ள அலுப்புப்பட்டு அவரது மகனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

ராஜ்கோட்: உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தாயை கவனித்துக்கொள்ள அலுப்படைந்து அவரது மகனே கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் வசித்து வந்தவர் ஜெய்ஸ்ரீபென். 64 வயதான இவருக்கு 36 வயதில் சந்தீப் நத்வானி என்ற மகன் உள்ளார்.
சந்தீப் நத்வானி ராஜ்கோட்டில் உள்ள ஃபார்மஸி கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகின்றார். தாயும் மகனும் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.

படுத்த படுக்கையான தாய்
இந்நிலையில் ஜெய்ஸ்ரீபென் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். படுத்த படுக்கையான அவரை மகன் சந்தீப் நத்வானிதான் கவனித்து வந்தார்.

தற்கொலை செய்த தாய்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி ஜெய்ஸ்ரீபென் அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

மாட்டிவிட்ட சிசிடிவி
இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சிசிடிவி காட்சிகளில் சந்தீப் தனது தாயை மாடிக்கு படி வழியாக தூக்கி செல்வதும், பின்னர் அவர் மட்டும் தனியாக கதவை திறந்து உள்ளேசெல்லும் காட்சிகளும் உள்ளன.

சிசிடிவியில் பதிவான காட்சிகள்
அவர் உள்ளே சென்ற அடுத்த சில நிமிடங்களில் ஒரு நபர் ஓடிவந்து ஏதோ கூறுகிறார். இதையடுத்து சந்தீப் பதறியடித்துக்கொண்டு கீழே செல்வதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

போலீசார் கிடுக்கிப்பிடி
இந்த வீடியோ காட்சிகளை கைப்பற்றிய போலீசார் சந்தீப்பிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் தாயை மாடியில் இருந்து தள்ளி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் சந்தீப்.

சலீப்பானதால் கொலை
தாயை கவனித்து கவனித்து சலிப்படைந்ததால் கொலை செய்ய திட்டமிட்டதாகவும், அதன்படி மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்து தற்கொலை நாடகமாடியதாகவும் சந்தீப் ஒப்புதல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தாயை மகனே கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications