வகுப்பறையில் மாணவனை கண்மூடித்தனமாக அடித்து உதைத்த ஆசிரியர் !
லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தில் வகுப்பறையில் 10 வயது சிறுவனை ஆசிரியர் அடித்து உதைக்கும் வீடியோ காட்சி இணையதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ளது ஏ.ஐ.எம்.எஸ் சர்வதேச இடைநிலை பள்ளி. இந்த பள்ளியில் வகுப்பு பாடம் சரியாக எழுதி வராத மாணவனை மற்ற மாணவர்கள் முன்னிலையில் வகுப்பறையிலேயே கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார் ஆசிரியர்.

மாணவனின் தலையை பிடித்து ஆட்டி கன்னத்தில் மாறி மாறி அறைந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. மேலும், இதில் ஆசிரியர் கையில் கிடைக்கும் பொருட்களை எடுத்து மாணவன் வகுப்பறையை விட்டு வெளியேறும் வரை அடிப்பதும் பதிவாகியுள்ளது.
இந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த காவலர்கள் மாணவனை அடித்த ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications