கொரோனாவால் பறி போன டீச்சர் வேலை.. குப்பை லாரி ஓட்டும் பெண்.. குடும்பத்துக்காக.. ஒடிஷாவில் உருக்கம்!
புவனேஸ்வரம்: கொரோனாவால் வேலையை இழந்த ஆசிரியை ஒருவர் குடும்ப வறுமைக்காக குப்பை சேகரிக்கும் வேனின் ஓட்டுநராக மாறியுள்ள சம்பவம் நடந்துள்ளது.
கொரோனா ஊரடங்கால் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கட்டுமான பணிகள் உள்ளிட்டவை இயங்கவில்லை.
ஊரடங்கு இருந்தாலும் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் என்பதற்காக பலர் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். இதில் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளும் தப்பவில்லை.

ஆசிரியை
அந்த வகையில் ஒடிஸா மாநிலத்தில் ஒரு ஆசிரியை கொரோனா கால ஊரடங்கால் இழந்துவிட்டார். இவரும் கணவர் ஆட்டோமொபைல் துறையில் இருந்தார். அவருக்கு வேலையிழப்பு ஏற்பட்டது. இதையடுத்து வீட்டில் இரு குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

குப்பை சேகரிக்கும் வேன்
இதையடுத்து அந்த பெண் குப்பை சேகரிக்கும் வேனின் ஓட்டுநராக சென்றுவிட்டார். அதாவது புவனேஸ்வரம் மாநகராட்சியின் குப்பை சேகரிக்கும் வேனில் பணியாற்றி வருகிறார். இந்த வேலை தனக்கு பிடிக்காவிட்டாலும் தனது குடும்பத்தினரின் உணவு தேவையை பூர்த்தி செய்வதற்காக இதை செய்தாக வேண்டும் என கூறுகிறார்.

குழந்தைகள்
மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தல் மற்றும் தனது வீட்டு வேலைகளை செய்து வருகிறார். இவரை போல் ஏராளமானோர் வேலையை இழந்து தங்களுக்கு சம்பந்தமே இல்லாத தொழில்களில் வயிற்றுப் பிழைப்புக்காக செய்து வருகிறார்கள்.

செல்போன்
அது போல் ஒடிஸாவில் செல்போன் வாங்க பணம் இல்லாததால் நிறைய மாணவர்கள் படிப்பை கைவிடும் சூழல் எழுந்துள்ளது. 4 பேருக்கு ஒரு செல்போன் என்ற வீதத்தில் படித்து வருகிறார்கள். இதுவும் செல்போன் இருக்கும் வரை தங்களால் படிக்க முடிகிறது. பிறகு பள்ளியிலிருந்து அனுப்பும் பாடங்களை படிக்க முடியவில்லை என்கிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications