விடிய விடிய நடந்த தேடுதல் வேட்டை.. என்கவுன்ட்டரில் தீவிரவாதி சுட்டுக்கொலை.. ஜம்மு காஷ்மீரில் ஷாக்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் காவல்துறையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். அவரிடமிருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டதிலிருந்து, பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்கும் பணியில் காவல்துறையினரும், பாதுகாப்பு படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சோபியான் பகுதியில் திடீர் ரெய்டு மேற்கொள்ளப்பட்டது. கத்தோஹாலன் பகுதியில் தீவிரவாதி ஒருவர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த ரெய்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் அவரிடமிருந்து துப்பாக்கிகள் போன்ற பயங்கர ஆயுதங்களும், வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பிவிட்டது, மக்கள் இயல்பு நிலைக்கு வந்துவிட்டனர் என மத்திய அரசு தரப்பில் தொடர்ச்சியாக கூறப்பட்டு வருகிறது.
ஆனால் சமீபத்திய என்கவுன்ட்டர்கள், போலீசாரின் கூடுதல் கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தப்படாமல் இருப்பது போன்றவற்றை சுட்டிக்காட்டி மாநிலத்தில் அமைதி திரும்பவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications