ஜம்மு காஷ்மீரில் புலம் பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல்! என்கவுண்ட்டரில் தீவிரவாதி கொலை!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் புலம் பெயர் தொழிலாளர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 7 பேர் பலியாகியிருந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினர் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் இணைந்து நடத்திய என்கவுண்ட்டரில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டிருக்கிறார்.
ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இதில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஓமர் அப்துல்லா, முதல்வராக வெற்றி பெற்றிருக்கிறார். வெற்றி பெற்ற கையோடு, மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். மறுபுறும், தீவிரவாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

நேற்று கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சோனமார்க் பகுதியில் புலம் பெயர் தொழிலாளர்கள் மீது, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இங்கு சுரங்கபாதையின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று மாலை தீவிரவாதிகள் சிலர், பணியாற்றிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் ஒரு மருத்துவர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் புலம் பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது இது முதல்முறையல்ல. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஷோபியான் மாவட்டத்தில் பீகாரை சேர்ந்த தொழிலாளி சுட்டு கொல்லப்பட்டார். அதற்கு முன்னர் கடந்த ஏப்ரல் மாதம் இதேபோல இரண்டு தொழிலாளர் சுட்டு கொல்லப்பட்டனர்.
இந்த தொடர் தாக்குதலையடுத்து நேற்று பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து ஜம்மு காஷ்மீர் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். அவரிடமிருந்து ஏகே 47 ரக துப்பாகி, கை துப்பாக்கிகள், ஏராளமான தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.
இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், "உளவுத்துறையின் தகவலையடுத்து பாரமுல்லா பகுதியில் நாங்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டோம். எல்லை தாண்டி வந்த பயங்கரவாதி ஒருவர் பாரமுல்லாவில் பதுங்கி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. தேடுதல் பணியின் போது எங்களை நோக்கி பயங்கரவாதி துப்பாக்கியால் சுட்டார், எனவே தற்காப்புக்காக தாக்குதல் நடத்தப்பட்டபோது அவர் உயிரிழந்தார்" என்று கூறியுள்ளார்.
புலம் பெயர் தொழிலாளர்களின் கொலைக்கு பழிவாங்கவே, என்கவுண்டர் செய்யப்பட்டாகவும் சொல்லப்படுகிறது. தொழிலாளர்கள் கொலை குறித்து முதல்வர் ஓமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications