‛திகில்’.. கமல்நாத் போட்டோவுக்கு சுடுகாட்டில் பூஜை.. நள்ளிரவில் பரபர சம்பவம்.. காங்கிரஸா இப்படி?
போபால்: மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் போட்டோவை சுடுகாட்டில் வைத்து நள்ளிரவில் பூஜை செய்த சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் அதன் பின்னணி குறித்த முக்கிய விஷயமும் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது.
மத்திய பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். இந்நிலையில் தான் மத்திய பிரதேச மாநில சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் முடிவுக்கு வர உள்ளது. இதனால் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.

அதன்படி மத்திய பிரதேசத்தில் உள்ள 230 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 17 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. மத்திய பிரதேசத்தை பொறுத்தமட்டில் பாஜக, காங்கிரஸ் இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது.
நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க பாஜக முயன்று வருகிறது. அதேபோல் பாஜகை வீழ்த்தி இழந்த செல்வாக்கை மீட்டு அரியணையில் அமர காங்கிரஸ் கட்சி வியூகம் வகுத்து பிரசாரத்தை தொடங்கி உள்ளன. காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் முன்னாள் முதல்வர் கமல்நாத், திக்விஜய் சிங் உள்ளிட்டோருடன் மேலிட தலைவர்கள் சேர்ந்து பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் முதல்வர் பதவி என்பது கமல்நாத்துக்கு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் தற்போது இணையதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அதாவது சுடுகாட்டில் கமல்நாத்தின் போட்டோவை வைத்து எலுமிச்சை பழங்கள் வைத்தும், தீமூட்டியும் மந்திரவாதிகள் சிலர் பூஜை செய்கின்றனர்.
இந்த வீடியோ தற்போது பேசு பொருளான நிலையில் தான் அதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த பூஜையை காங்கிரஸ் கட்சியினர் தான் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், கமல்நாத்தும் வெற்றி பெற வேண்டும். அதோடு கமல்நாத் மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதற்காக இந்த பூஜை மந்திரவாதிகள் மூலம் நடத்தப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தை பொறுத்தமட்டில் மொத்தம் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் ஒரு கட்சி 116 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். கடந்த 2018ம் ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 114 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
மாறாக பாஜக 109 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து காங்கிரஸ் கட்சி பாஜக அல்லாத பிற கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது. கமல்நாத் முதல்வரானார். ஆனால் முதல்வர் பதவி கிடைக்காத அதிருப்தியில் ஜோதிர்ஆதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் விலகி பாஜகவில் இணைந்து மத்திய அமைச்சரானார். இதனால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி கவிழ்ந்தது. மீண்டும் பாஜக அரியணை ஏறியது. சிவ்ராஜ் சிங் சவுகான் மீண்டும் அங்கு முதல்வராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் அடுத்த மாதம் 17 ம் தேதி மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று கமல்நாத் முதல்வராக வேண்டி சுடுகாட்டில் கமல்நாத்தின் ஆதரவாளர்கள் மந்திரவாதிகள் மூலம் சிறப்பு பூஜை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications