சூடுபிடிக்கும் ராஜஸ்தான் தேர்தல் களம்.. ஓங்கும் வசுந்தர ராஜே செல்வாக்கு.. யுக்தியை மாற்றும் பாஜக
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. களத்திலும் வசுந்தர ராஜே குறித்த பேச்சுதான் அதிகம் அடிப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. இம்மாநிலத்தில் மொத்தம் 200 தொகுதிகள் இருக்கின்றன. இந்நிலையில் மாநிலத்திற்கு வரும் 25ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. ஆனால், இம்மாநிலத்தில் இதுவரை எந்த ஒரு கட்சியும் இரண்டு முறை தொடர்ச்சியாக ஆட்சி அமைத்தது கிடையாது என்பது வரலாறு.

எனவே பாஜக தனது பிரசாரத்தை தீவிரப்படுத்தி ஆட்சியை பிடிக்க திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் பாஜகவுக்கு ஆதரவாக இருக்கும் தொகுதிகளின் கள நிலவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அம்மாநில பாஜக தலைமை சற்று அதிருப்தியில் இருக்கிறது. காரணம் வசுந்தர ராஜே தான். கடந்த 2018ம் ஆண்டு தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததிலிருந்து வசுந்தர கட்சி தலைமையினால் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டப்பட்டார்.
இது இந்த தேர்தல் வரை நீடித்து வந்திருக்கிறது. பாஜக முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்தபோது அதில் வசுந்தரா ராஜேவின் ஆதரவாளர்கள் ஒருவர் கூட இடம்பெற்றிருக்கவில்லை. இவ்வளவு ஏன் வசுந்தரா ராஜே பெயரே இரண்டாம் கட்ட பட்டியலில்தான் வெளியானது. ஆனால் தற்போது கிடைத்துள்ள கள தகவல்களில் வசுந்தராவுக்கு ஆதரவு அமோகமாக இருப்பது தெரிய வந்திருக்கிறது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் கூட கோட்டா, பூண்டி, பரான் மற்றும் ஜலாவர் போன்ற மாவட்டங்களில் எப்போதும் பாஜகவுக்குதான் ஆதரவாக இருக்கும். இந்த மாவட்டங்களில் மொத்தம் 17 தொகுதிகள் இருக்கின்றன. 2018 தேர்தலில் இந்த மாவட்டங்களிலிருந்து 10 தொகுதிகளை பாஜக வென்றிருந்தது. குறிப்பாக காங்கிரஸ் அல்லாத முதலமைச்சர்கள் இந்த மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் போட்டியிட்டுதான் வென்றிருக்கிறார்கள். ஆனால் இந்த முறை நிலைமை இப்படி இருக்காது என்று சொல்லப்படுகிறது. காரணம் வசுந்தரா ஓரம் கட்டப்பட்ட விஷயம்தான்.
வசுந்தராவுக்கு பதில் பாபா பாலக்நாத் மற்றும் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் பாஜகவின் முகமாக காட்டப்படுகிறார்கள். இவர்கள் இருவருக்கும் களத்தில் பெரிய அளவுக்கு ஆதரவு இல்லை. மக்கள் செல்வாக்கு வசுந்தரா ராஜேவுக்குதான் அதிமாக இருக்கிறது. எனவே இப்பகுதி மக்கள் ஏமாற்றமடைந்துள்ளன. இதுதான் தற்போது பாஜகவுக்கு புதிய தலைவலியாக கிளம்பியுள்ளது.
அதேபோல முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக பெரிய அளவில் மாநிலத்தில் அதிருப்தி இல்லை. சச்சின் பைலட்-அசோக் கெலாட் மோதலை பாஜக பயன்படுத்தினாலும், கெலாட்டின் சில சமூக நீதி திட்டங்கள் இதை முறியடித்து, பேசுபொருளாக மாறியிருக்கிறது. பத்தாத குறைக்கு சம்பல் நதி முகப்புத் திட்டம் மூலம் கெலாட் பாஜகவின் கோட்டையாக இருக்கும் 4 மாவட்டங்களில் நுழைய முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். இந்த திட்டத்தால் மேற்குறிப்பிட்ட மாவட்ட மக்கள் அதிகம் பலனடைவார்கள் என்பதால் காங்கிரசுக்கு ஆதரவான அலையே தற்போது வீசுகிறது. எனவே நிலைமையை உணர்ந்து பாஜக கொஞ்சம் கொஞ்சமாக வசுந்தராவை முன்னிறுத்த முயன்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications