டாய்லெட்டை திறந்தால் உள்ளே பல லட்சம் மதிப்பிலான "வைர மோதிரம்.!" ஸ்டன் ஆகி நின்ற ஊழியர்கள்! எப்புட்றா
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் டாய்லெட்டை திறந்து பார்த்தால் அங்கே பல லட்சம் மதிப்பிலான வைர மோதிரம் இருப்பதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்துவிட்டனர்.
திருட்டு, கொள்ளை என எந்தவொரு தவறை செய்தாலும் நாம் நிச்சயம் தண்டிக்கப்படுவோம். அப்போது தப்பித்தது போலத் தெரிந்தாலும், நாம் செய்த தவறு பூமராங் மாதிரி நிச்சயம் திரும்ப வந்து நம்மையே தாக்கும்.

இப்படிக் குறுக்கு வழியில் பணக்காரனாக முடிந்தாலும், அவை நிச்சயம் குறுகிய காலம் மட்டுமே நீடிக்கும். தப்பு செய்தவர்கள் நீண்ட காலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவே முடியாது. இதற்குப் பல உதாரணங்கள் இருக்கும் நிலையில், அப்படியொரு சம்பவம் தான் தெலங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது.
ஷாக் சம்பவம்: தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள தோல் கிளினிக் (skin and hair clinic) ஒன்றுக்குப் பணக்கார பெண் ஒருவர் சென்றுள்ளார். அவர் விலையுயர்ந்த வைர மோதிரம் ஒன்றை அணிந்து சென்றுள்ளார் அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் அந்த மோதிரத்தைப் பார்த்ததும் அதை எப்படியாவது தனதாக்கிக் கொள்ள வேண்டும் என ஆசை வந்துள்ளது. அதன் பின்னர் அடுத்தடுத்து அங்கே நடந்த சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்துள்ளது.
அந்த பெண்ணுக்கு முடியில் பிரச்சினை இருந்ததால் அதை அகற்றக் கடந்த வாரம் ஜூபிலி ஹில்ஸில் உள்ள அந்த கிளினிக்கிற்குச் சென்றுள்ளார். அப்போது முடி அகற்றும் செயல்முறையின் போது, அங்கிருந்த ஊழியர்கள் மோதிரத்தைக் கழற்றி வைக்கும்படி தெரிவித்துள்ளனர். அதன்படி அந்த பெண்ணும் மோதிரத்தைப் பெட்டியில் வைத்துள்ளார். அவருக்கான முடி அகற்றும் சிகிச்சை சுமுகமாக நடந்துள்ளது.
வைர மோதிரம்: அதன் பின்னர் அங்கிருந்து கிளம்பிவிட்டார். வீட்டிற்குத் திரும்பிய பிறகு தான் கிளினிக்கிலேயே தனது மோதிரத்தை மறந்துவிட்டதை அந்த பெண் உணர்ந்துள்ளார். இதையடுத்து உடனடியாக க்ளினிக் ஊழியர்களிடம் இது குறித்து விசாரித்துள்ளார்.
அவர்கள் இது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று சொல்லிவிடவே அதிர்ச்சியடைந்த அந்த பெண் இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். க்ளினிக்கில் தான் யாராவது மோதிரத்தை எடுத்திருப்பார்கள் எனச் சந்தேகித்த போலீசார் அங்கே விசாரணையை ஆரம்பித்தனர்.
டாய்லெட்: அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரித்துள்ளனர். அப்போது தான் அங்கிருந்து பெண் ஊழியர் ஒருவர் மோதிரத்தைத் திருடியதை ஒப்புக் கொண்டார். அங்கிருந்த மோதிரத்தைத் திருடி தனது பர்ஸில் வைத்ததை ஒப்புக் கொண்டார். இருப்பினும் சற்று நேரத்தில் மோதிரம் மாயமானதை உணர்ந்து அந்த கிளினிக்கிற்கு வந்த பெண் போன் செய்து சத்தம் போட்டதால் பெண் ஊழியர் அச்சமடைந்துள்ளார்.
போலீஸில் புகார் அளித்தால் எங்கு தான் மாட்டிக் கொள்வோம் என்பதை அஞ்சிய அவர், கிளினிக்கில் உள்ள டாய்லெட்டில் கொண்டு போய் அதை வீசிவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து போலீசார், பிளம்பர் ஒருவரின் உதவியுடன் டாய்லெட் குழாயிலிருந்து அந்த 30 லட்சம் மதப்புள்ள மோதிரத்தை மீட்டனர். கிளினிக்கில் பணிபுரிந்த அந்த பெண் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் அடுத்தகட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications