'என்னங்க... காய்கறி இப்படி வாங்குங்க!'- என்னா வெவரமான பொண்டாட்டி பாருங்க!!

பெண் ஒருவர் காய்கறி வாங்கும்போது தவறான காய்கறிகளை வாங்கி விடக் கூடாது என்பதற்காக வித்தியாசமான பட்டியலை தயார் செய்து கணவருக்கு அனுப்பியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பெண் ஒருவர் காய்கறி வாங்கும்போது தனது கணவர் தவறு நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக ஒரு காய்கறி பட்டியலை தயார் செய்துள்ளார்.

திருமணத்துக்கு பின்னர் மளிகை பொருள்களாகட்டும், காய்கறிகளாகட்டும், அதை வாங்கி வருவதற்கு மனைவி பட்டியல் தயாரித்து அதை கணவரிடம் கொடுத்தால் போதும் அதை வாங்கி வருவதற்குள் தலைவலியே வந்துவிடும்.

அப்படியே கஷ்டப்பட்டு வாங்கி வந்தாலும் "நான் சொன்னது என்ன?, நீங்கள் வாங்கி வந்தது என்ன?" என்று தம்பதிக்கிடையே மோதல் ஏற்படும். இது வீட்டுக்கு வீடு நடக்கும் வழக்கமான ஒன்றுதான்.

சொத்தை, அழுகல்

சொத்தை, அழுகல்

அப்படியே சரியாக வாங்கி வந்துவிட்டாலும் கத்திரிக்காய் சொத்தையாக உள்ளது, வெண்டைக்காய் முற்றலாக உள்ளது, உருளைக்கிழமை பச்சையாக உள்ளது என்று குறை கூறுவதும் உண்டு.

பலே ஐடியா

இதுபோல் நாம் கொடுக்கும் காய்கறி பட்டியலை கணவர் தவறாக வாங்கி வந்துவிட்டு பிறகு இதனால் பிரச்சினை வரக் கூடாது என்பதற்காக பெண் ஒருவர் பலே ஐடியாவை செய்துள்ளார் பாருங்கள்.

தவறே நடக்காது

தவறே நடக்காது

இதுபோன்று பெண் தயாரித்துள்ள பட்டியலால் நிச்சயம் தவறு நடக்காது. அதாவது காய்கறிகள் ஒவ்வொன்றும் எப்படி இருக்கும். அதை எப்படி பார்த்து வாங்க வேண்டும். எத்தனை கிலோ வாங்க வேண்டும் என்பதை தெளிவாக பட்டியலிட்டுள்ளார்.

பட்டியலில் என்ன

பட்டியலில் என்ன

பட்டியலில் தக்காளி வாங்கும்போது கொஞ்சம் மஞ்சள் நிறத்திலும், கொஞ்சம் சிவப்பு நிறத்திலும் இருக்க வேண்டும் என்றும் அதில் ஓட்டைகளோ, வெடிப்புகளோ இருக்கக் கூடாது என்றும் உள்ளது. அதேபோல் வெங்காயம் எப்படி இருக்கும் என்ற படத்துடன் அதை எந்த அளவில் வாங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்துக்கும் படம்

அனைத்துக்கும் படம்

இதேபோல் உருளைக்கிழங்கு, வெண்டைக்காய், பாலக் கீரை உள்ளிட்டவற்றுடன் தோசை மாவுடன் சேர்த்து வாங்கி வருமாறு குறிப்பிட்டுள்ளார். இதுகூட பரவாயில்லை, ஆனால் பச்சை மிளகாய் இலவசமாக வாங்கி வரவும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடையின் பெயரும் உண்டு

கடையின் பெயரும் உண்டு

காய்கறி பட்டியல் சரி. எந்த கடையில் வாங்க வேண்டும் என்பதையும் அவர் குறிப்பிட்டுளளார். இத்தனைக்கு பிறகும் மனிஷன் தப்பா வாங்கிட்டு வந்தா என்னா பன்றதுனு சொல்றீங்களா?, அதுவும் சரிதான்!!.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+