வாய் தகராறு காரணமாக பக்கத்து வீட்டு குழந்தையை கொன்ற பெண்.. நாள் முழுக்க நடந்த நாடகம்
டெல்லியில் சண்டை காரணமாக ஒரு பெண் பக்கத்து வீட்டில் இருந்த குழந்தையை கொன்று இருக்கிறார்.
Recommended Video

டெல்லி: டெல்லியில் உள்ள பெண் ஒருவர் பக்கத்து வீட்டுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக அந்த வீட்டில் இருந்த குழந்தையை கொலை செய்து இருக்கிறார். கொலை செய்தது மட்டும் இல்லாமல் அவர் நாள் முழுக்க மிகவும் திறமையாக நாடகம் வேறு ஆடியிருக்கிறார்.
போலீசில் மிகவும் திறமையாக பொய் சொல்லி முதலில் தப்பி உள்ளார். தற்போது இவர் கொலை செய்தது எப்படி என வாக்குமூலம் அளித்து இருக்கிறார்.
போலீசார் தற்போது அந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி இருக்கின்றனர். டெல்லியில் சில நாட்களுக்கு முன்பு இதேபோல் குழந்தையை கொன்றுவிட்டு பெண் ஒருவர் நாடகமாடிய கதை நடந்தேறியது.

பக்கத்து வீட்டு பெண்ணுடன் சண்டை
டெல்லி உத்தம் நகரில் வசிக்கும் 30 வயது பெண் ஒருவர் தன் பக்கத்து வீட்டில் இருக்கும் குடும்பத்துடன் அடிக்கடி சண்டையில் ஈடுபட்டு வந்து இருக்கிறார். இந்த சண்டை நேற்று விஸ்வரூபம் எடுத்து கைகலப்பாக மாறியிருக்கிறது. இந்த சண்டையில் பக்கத்து வீட்டில் இருந்த பெண் இவரை மோசமான வார்த்தைகளில் திட்டி இருக்கிறார். இதனால் அந்த பெண் மிகவும் மனமுடைந்து போய் இருக்கிறார்.

பழிக்குப் பழி
தன்னை பக்கத்து வீட்டில் இருக்கும் பெண் திட்டியதை பொறுத்துக் கொள்ள முடியாத அந்த பெண் எப்படியாவது அந்த குடும்பத்தை பழி வாங்க வேண்டும் என்று நினைத்து உள்ளார். இதனால் பக்கத்து வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டு இருந்த அவர்கள் வீட்டு குழந்தையை சாக்லேட் தருவதாக பேசி கூப்பிட்டு இருக்கிறார். குழந்தையை வீட்டுக்குள் அழைத்து வந்த அந்த பெண் அங்கேயே குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்து உள்ளார்.

நாடகம் நடத்திய பெண்
இந்த நிலையில் பல மணிநேரமாக குழந்தையை காணாத காரணத்தால் அந்தப் பெண் தேட ஆரம்பித்து இருக்கிறார். பக்கத்து வீட்டை சேர்ந்த இந்த பெண்ணும் அவருடன் சேர்ந்து குழந்தையை தேடி இருக்கிறார். மேலும் குழந்தையை தேடும் போதே சண்டைக்கு சமாதானம் பேசுவது போல பேசி நடித்து உள்ளார். அந்த பெண் தன் குழந்தையை தேடுவதை பார்த்து மயங்கி குழந்தையின் தாய் அவரிடம் சண்டை போட்டதற்கு மன்னிப்பு வேறு கேட்டு உள்ளார்.

உண்மை தெரிந்தது
பல மணி நேரம் தேடியும் குழந்தை கிடைக்காத காரணத்தால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் போலீஸ் விசாரணையில் அந்த பெண் பக்கத்து வீட்டு பெண்ணுடன் நடந்த சண்டை குறித்தும் பேசி இருக்கிறார். இதையடுத்து போலீசார் அந்த பக்கத்து வீட்டு பெண்ணின் வீட்டில் குழந்தையை தேடினர். அதன்பின் கட்டிலுக்கு அடியில் கொலை செய்யப்பட்டு கிடந்த குழந்தையை கண்டுபிடித்தனர். தற்போது போலீசார் அந்த பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications